இராகேசு இலக்கானி - rajeshlakkaani

தேர்தல் செலவுக் கணக்கை அளிக்காத

42 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட

மூன்று ஆண்டுகள் தடை

  நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான முப்பது நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கை அளிக்க வேண்டும். அப்படிஅளிக்காதவேட்பாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடாதவாறு தடை போடத் தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு.

1951-ஆம் ஆண்டின் மக்கள் சார்பாளுகை(பிரதிநிதித்துவ)ச் சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவுகளின்படி, தமிழகத்தில் தேர்தல் செலவுக் கணக்கை அளிக்காதவேட்பாளர்கள் 42 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் தடை இட்டிருக்கிறது.

  இதில் 2011ஆம் ஆண்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்களும் ‘அடங்குவர்’. இந்தத் தகவலை மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் இராசேசு இலக்கானி தெரிவித்தார். அதே நேரம், தடை இடப்பட்ட இந்த 42 பேரும் தற்சார்பு(சுயேச்சை) வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவு:

 பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan