விடுதலை நாளை முன்னிட்டு

மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா

vizhaa-devathanappatti02

தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற உறுப்பினர் சலீம்ராசா, ஒன்றிய உறுப்பினர் கண்ணன் முதலான பலர் கலந்து கொண்டனர்.

செய்தி : வைகை அனிசு