அ.வாடிப்பட்டி ஊரட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் விழா

அ.வாடிப்பட்டி ஊரட்சியில்  விடுதலை நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமால பிச்சைமணி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டார். அதன்பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி, புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி   மாணாக்கர் கலந்து கொண்டனர்.

தேவதானப்பட்டியில் அழிந்து வரும் சிற்பக்கலை

  தேவதானப்பட்டி பகுதியில் சிற்பக்கலை அழிந்து வருகிறது. அதனைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதியில் சிலைகள் வடிவமைக்கத்தேவையான திறனுடைய கற்கள் அதிகம் உள்ளன. மறைந்த முன்னாள்  தலைமையாளர் இராசீவு காந்தி அவர்களுக்குத் திருப்பெரும்புதூரில் சிலை அமைக்க இப்பகுதியில் இருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அவ்வளவு பெருமை வாய்ந்த கற்கள் இப்பகுதியில் உள்ளன.   இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்கள், கற்சிலைகள் அனைத்தும் அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்த கற்களைக் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டன….

அ.வாடிப்பட்டியில் பரிசுகள் வழங்கும் விழா

விடுதலை நாளை முன்னிட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற…