காரைக்குடியில் வண்ணக் கோலப்போட்டி- சொ. வினைதீர்த்தான்
அண்மையில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் நுண்கலை- பண்பாட்டு மையத்தின் சார்பில் அதன் கல்லூரிகளின் மாணவ மாணவிரிடையே நாட்டுப்புறப்பாடல்கள், தனிப்பாடல்கள், கோலப்போட்டி முதலானவை போட்டிக்கான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. பல கோல ஓவியங்களில் எழுதியிருந்ததைக்கொண்டு போட்டிக்கான தலைப்பு “எண்ணங்களின் வண்ணங்கள்’ என அறிந்தேன்.
கண்டு களித்த வண்ணக் கோலங்கள் சில : – சொ. வினைதீர்த்தான்
[கோல மாவில் ஓவியங்கள் வரைவதே வண்ணக் கோலம் என்றாகிவிட்டது. அவ்வாறில்லாமல், புள்ளிகள் மூலம் ஓவியங்கள் அமையும் வண்ணக்கோலம் பெருக வேண்டும். தமிழக நாகரிக, பண்பாட்டு, வரலாற்று நிகழ்வுகளைக் கோலங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். தமிழ் அமைப்புகள் அதற்கேற்றாற்போல் கோலப் போட்டிகள் நடத்த வேண்டும். – ஆசிரியர்]
புள்ளிகள், கோடுகள் கொண்டு வரைவதே கோலம். இதுக்கு மாற்றுப்பெயர் சூட்டணும்.
உண்மைதான். புள்ளிகளால் இடப்படும்கோலத்தில் வண்ணம் தீட்டினால் அது வண்ணக்கோலம். இப்பொழுதெல்லாம் கோலமாவில் ஓவியம் வரைந்து வண்ணக்கோலம் என்கின்றனர். மாவோவியம் எனலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /