தேசிய வாக்காளர் நாள் விழா, தேவகோட்டை

தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சார் ஆட்சியர் கலந்துரையாடல்   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாட்டத்தில் 100 விழுக்காடு வாக்களிக்க ஆவன செய்வதே தேசிய வாக்காளர் நாளின் நோக்கம் எனத் தேவகோட்டை சார் ஆட்சியர் பேசினார்.      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் விழாவில் கலந்துகொண்டோரை வரவேற்றார். தேவகோட்டை சார் ஆட்சியர் மரு.ஆல்பி…

காரைக்குடியில் வண்ணக் கோலப்போட்டி- சொ. வினைதீர்த்தான்

அண்மையில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் நுண்கலை- பண்பாட்டு மையத்தின் சார்பில் அதன் கல்லூரிகளின் மாணவ மாணவிரிடையே  நாட்டுப்புறப்பாடல்கள், தனிப்பாடல்கள், கோலப்போட்டி முதலானவை   போட்டிக்கான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. பல கோல ஓவியங்களில் எழுதியிருந்ததைக்கொண்டு போட்டிக்கான தலைப்பு “எண்ணங்களின் வண்ணங்கள்’ என அறிந்தேன். கண்டு களித்த வண்ணக் கோலங்கள் சில : – சொ. வினைதீர்த்தான் [கோல மாவில் ஓவியங்கள் வரைவதே வண்ணக் கோலம் என்றாகிவிட்டது. அவ்வாறில்லாமல், புள்ளிகள் மூலம் ஓவியங்கள் அமையும் வண்ணக்கோலம் பெருக வேண்டும். தமிழக நாகரிக, பண்பாட்டு, வரலாற்று…