தமிழக வாழ்வாதார அழிப்பு – கருத்தரங்கம்
இந்திய எரிவளி ஆணையக் (GAIL) குழாய்கள் பதிப்பும்
தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்
மாசி 08, 2047 – 20-2-2016 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை இதழாளர் மன்றத்தில் இந்திய எரிவளி ஆணையக் (ழுஹஐடு) குழாய்ப் பதிப்பின் கண்டத்தை(ஆபத்தை) விளக்கும் இதழாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு உழவர்கள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன், இந்திய எரிவளி ஆணையக் (GAIL) குழாய்கள் பதிப்பால் பாதிக்கப்பட்டவர்களான தோழர் பொன்னம்மாள், தோழர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு, சென்னைத் தியாகராயர் நகரில் ‘இந்திய எரிவளி ஆணையக் (கெயில்) குழாய்கள் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத் தோழர் பிரவின், தோழர் அருண் தங்கராசு, தமிழக உழவர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கத் தோழர் ஈசன், தோழர் சா.காந்தி, தற்சார்பு உழவர்கள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தோழர் வெற்றிச்செல்வன், தோழர் சுந்தரராசன் இந்திய எரிவளி ஆணையக் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்டவர்களான தோழர் பொன்னம்மாள், தோழர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தொகுத்து வழங்கினார். பொதுமக்கள் ஏராளமானோரும் சூழலியல் ஆர்வலர்கள், உணர்வாளர்கள் போன்றோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்திய எரிவளி ஆணையக் குழாய்கள் பதிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுத் தங்கள் நிலத்தைக் காக்க அந்த மண்ணிலிருந்து போராடும் தோழர்கள் பொன்னம்மாள், வசந்தாமணி ஆகியோரின் போர்க்குரல் இக்கருத்தரங்கத்தின் மையமாக அமைந்தது.
இந்தக் கருத்தரங்கத்தைத் தற்சார்பு உழவர்கள் இயக்கமும் மே பதினேழு இயக்கமும் ஒருங்கிணைத்தன.
[படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]
தரவு:
Leave a Reply