புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-7

புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

   அதன் ஏழாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதப்படலம், காப்புப் படலம், தாடகைக் கொலைப்படலம், மிதிலைப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

   தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார். நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். திக.வின் தோழர்களும் தமிழ் அன்பர்களும் திரளாக அதில் கலந்து கொண்டனர். அரசு முன்னிலை உரை நிகழ்த்தினார்.

  இறுதியில் பகுத்தறிவாளர் கழகச்செயலர் நெ.நடராசன் நன்றிகூறினார்.