புதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்
தனித்தமிழ் இயக்கமும் புதுவைத் திருக்குறள்மன்றமும் இணைந்து வீடுதோறும் திருக்குறள் அன்பளிப்பாகத் தரும் முயற்சியில் 2047 மாசி / கும்பத்திங்கள் 11ஆம் (23.2.2016) நாளில் ஈடுபட்டன.
தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் முதலியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிச் சிவாசி நகரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை வரவேற்றனர்.
நல்ல முயற்சி! தமிழ்நாட்டிலும் செய்யலாமே!
முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் —- ஆகியோர் தெளிதமிழ் மனதோடு புதுச்சேரி மக்களுக்குத் திருக்குறள் கொடுக்கும் நிகழ்வைத் தொடங்கியிருப்பது உயர்வானது.
வாழ்த்துகிறேன். செய்தி கண்டு மகிழ்ந்தேன்.
ஆனால் இதனால் எந்தப் பயன் விளையும் என்று நினைக்கிறீர்கள் ?
மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.
ஒர் ஆசிரியப்பயிற்றுநர் என்கிற நிலையில் இதனைச் சொல்கிறேன்.
ஒரு நாளில் 300 குறள்களை உளவியல் வழியில் மாணவர்களுக்குள் பதிய
வைக்கிற உயரிய முயற்சியை நான் முறைப்படுத்தி வருகிறேன்.
இதில் பங்கு கொள்ளும் மாணவர்கள் மிகுபயன் பெறுவர்
திருக்குறளை உள்வாங்கி எழுவர் இதை நாம் தொடங்கி வைப்போம்.
திட்டமிடவும்
அன்புடன்
பொள்ளாச்சி நசன்
(நிகழ்வு சனி 2,00 மணிக்குத் தொடங்கி ஞாயிறு 2.00 மணிக்கு நிறைவடையும்)