புதுச்சேரி-காரைக்கால் வரலாற்றுப் பயிலரங்கம்
காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, வரலாற்றுத ஆகியன சார்பில் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம்(ஆடி 23, 2045 / ஆக.8, 2014) நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார். தமிழ்த்துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். வரலாற்றுத்துறை தலைவர் பச்சவள்ளி நோக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சாயபுமரைக்காயர் தொடக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சசிகாந்தாசு புதுச்சேரி அரிக்கன்மேடு கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசினார்.முனைவர் நடராசன் பயிலரங்கத்தின் உரையாற்றினார்.
மூன்று கட்டமாக நடந்த பயிலரங்க நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நிர்மலா, தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் தில்லைவனம், சொல்லாய்வறிஞர் முனைவர் வேல்முருகன், இணைப் பேராசிரியர் முனைவர் மாணிக்கம், தாகூர் கலைக்கல்லூரி துணைப் பேராசிரியர் முனைவர் இரவிச்சந்திரன், பேராசிரியர்கள் இரத்னாவதி, இராகவன், சிந்தாமணி ஆகியோர் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்து கருத்துரை வழங்கினர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் நா.இளங்கோ கூறுகையில், புதுச்சேரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிக்கன்மேடு பகுதியில், கிரேக்க, உரோமானிய வணிகர்கள் தொடர்பில் இருந்தனர் என்பதற்கும், உரோமானியர்கள் புதுச்சேரியில் பயன்படுத்திய அரிடைன், இரவுலட் பானை, ஓடுகள், கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வண்ண மணிகள், கல் தொழிற்சாலைகள் இருந்ததற்கான தொல்பொருள் ஆதாரங்கள் கண்காட்சியில் உள்ளன என்றார்.
Leave a Reply