புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரதாசு சுவாமிகள் விழா
நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கார்த்திகை 19அ 2046 / திசம்பர் 05, 2015 அன்றுநடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார்.
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால் பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் புதுவைப் பல்கலைக் கழக நாடகத்துறை பேராசிரியர் முனைவர் ப.முருகவேல் இசையுரை வழங்கினார்
மேனாள் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழ்மாமணி மன்னர்மன்னன் சிறப்புரையாற்றினார்
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தியாகி மு. அப்துல் மசீத், கலைமாமணி கல்லாடன், முனைவர் அ.கனகராசு, செந்தமிழ் அருவி கலக்கல் காங்கேயன் ஆகியோர் விழாவினை நெறிப்படுத்தினர்.
ஆட்சிக் குழு உறுப்பினர் பேரா.இரா.விசாலாட்சி நன்றி கூறினார்
விழாவில் திரளான தமிழன்பர்கள் கலந்துகொண்டனர்
Leave a Reply