புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
உலகத் திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா வள்ளுவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015 காலை 10.00மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’ என்ற இரு நூல்கள் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன.
அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன், கலைமாமணி முனைவர் சேயோன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர்.
முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் உலகத் திருக்குறள் மைய நிறுவனர் முனைவர் கு.மோகனராசின் அளப்பரிய திருக்குறள் தொண்டினையும், நூலாசிரியர்புலவர் தி.வே. விசயலட்சுமி, திருக்குறளை நுணுக்கமாக ஆய்ந்து கண்ட ஆய்வு முடிவுகளையும், அவர்தம் நுண்மாண் நுழைபுலம் மிக்க எழுத்தாற்றலையும் வியந்து பாராட்டிப் பேசினார்.
முன்னதாக நூலாசிரியர் அவையில் வீற்றிருந்த சான்றோர்களை வரவேற்று அறிமுகப் படுத்தினார்.
கவிமாமணி முனைவர் குமரிச்செழியன் இணைப்புரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
பெரிதாகக் காணப் படங்களை அழுத்தவும்!
Leave a Reply