மாணிக்கவாசகம்பள்ளி, ஓவியப்போட்டி, பாராட்டு01 ; manickavasakampalli_licparisu01 மாணிக்கவாசகம்பள்ளி, ஓவியப்போட்டி, பாராட்டு02 ; manickavasakampalli_licparisu02

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் 

வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு

தேவகோட்டை,  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  வாணாள் காப்பீட்டுக் கழகம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

 விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளி மாணவர்  இராசேசு வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  வாணாள் காப்பீட்டுக்கழகம்(எல்.ஐ.சி.) சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த 3 ஆம் வகுப்பு மாணவர் பாலமுருகன்,  மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் கிசோர்குமார் ஆகியோர்க்குப் பரிசுகளும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன.

பங்கு பெற்ற  பிற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கபட்டது. பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிறைவாக மாணவி அல்நிசுமா நன்றி தெரிவித்தார்.

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/