ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன்
அவர்கட்கு வீரவணக்கம்!
தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட ...