image-47182

தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 4  நான் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு ஒரு குடியுரிமை இருந்தால், இந்தியக் குடியுரிமை இல்லை என்றாலும்  நாம் தமிழ்நாட்டுக் குடியுரிமை வழங்க முடியும். இப்போது தமிழ்நாட்டில் ஏதிலியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் குடிமக்களா? அவர்கள் ஏதிலிகள் கூட இல்லை. ஏனென்றால் எதிலிகள் ...
image-47197

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 - 732 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 727. Oxygen - உயிர்க்கால் நெஞ்சத்தின் வலது ...
image-47096

என் சரித்திரம் 40 : ஏக்கமும் நம்பிக்கையும்

(என் சரித்திரம் 39: என் கல்யாணம் தொடர்ச்சி) அத்தியாயம் 23ஏக்கமும் நம்பிக்கையும் களத்தூரில் இருந்தபோது எங்களுக்கு வந்த தானியங்களில் கம்பு முதலியன அதிகமாகவும் நெல் குறைவாகவும் இருந்தன. கம்பு முதலியவற்றைக் கொடுத்துவிட்டு நெல்லாக மாற்றிக்கொள்வது வழக்கம்.அன்னையார் கம்பஞ் சாதம் உண்டதுஒருநாள் என் தாயார் உண்ணும்போது நான் கவனித்தேன். அவர் இலையில் இருந்த உணவு புதியதாகத் தோற்றியது; அவர் கம்பஞ்சாதத்தை ...
image-47178

தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3

(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 3  மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் ...
image-47087

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):37 – தேவும் தலமும் தொடர்ச்சி) மலையும் குன்றும் திருவண்ணாமலை      ஈசனார் கோவில் கொண்டு விளங்கும் திருமலைகளைத் தொகுத்துரைத்தார் திருஞான சம்பந்தர்:         “அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறகலா         முதுகுன்றம் கொடுங்குன்றமும்” என்றெடுத்த தேவாரத்தில் அமைந்த அண்ணாமலை வட ஆர்க்காட்டிற் சிறந்து திகழும் திருவண்ணாமலையாகும். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன்  அரும் பெருங் சோதியாகக் காட்சி தரும் திருமலை, அண்ணாமலை ...
image-47172

தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2

(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 2  நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்;  மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் ...
image-47188

ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 –தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 - ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! எழுதவே வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! எத்தனை முறைதான் அரசின் ஆங்கிலத்திணிப்பைக் குறித்து எழுதுவது? இரு நாள் முன்னர்ப் பிறப்பித்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை கூட ஆங்கிலத்தில்தான். பொதுத்துறை ...
image-47152

தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’ ?

(தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால் - தொடர்ச்சி) சீமான் ‘தமிழவாளரா’? திமுக ஏற்கெனவே அதற்குரிய வழியில் பாசகவை வீழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரத்தைத் தீர்மானிக்கிற வரை தேர்தல் போராட்டமும் அதில் குடியாட்சியம் பெறுகிற வெற்றியும் முகன்மையானவை. ஆர்எசுஎசு ஏவலின் படி மோதியும் அமித்துசாவும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாசக ஆட்சியை நீக்கமற நிறுவ எல்லா முயற்சியும் ...
image-47157

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 42 : பழந்தமிழும் தமிழரும் 2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும்.1 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 2  தமிழ்மொழி, முண்டா திராவிடம் ஆரியம் என்னும் மூன்றினாலும் உருவாயது என்று வையாபுரிப்பிள்ளை கூறுகின்றார். (It is clear that the Tamil Language is a Composite texture of three elements, viz, the Munda, the Dravidian and ...
image-47070

தமிழ்நாடும் மொழியும் 42 : தமிழ் மொழியும் வடமொழியும் – அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 41 : பிற நூல்கள் தொடர்ச்சி) 5. தமிழ் மொழியும் வடமொழியும் அஃது ஒரு காலம்; எது? தமிழும் வடமொழியும் ஒன்று; அது மட்டுமல்ல; தமிழே வட மொழித்தாயிடமிருந்து தோன்றிய ஒரு மொழி என்று எண்ணிவந்த காலமது. மேலும் அக்காலத்திலே வாழ்ந்த தமிழறிஞர்களும் வட மொழி வாணரும் வட மொழியின் துணையின்றித் தமிழ் வாழவே முடியாது ...
image-47150

தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால்

(தோழர் தியாகு எழுதுகிறார் 124: நம்ப முடியுமா? தொடர்ச்சி) நாற்றங்கால் தாழி நூறு கண்டதை ஒட்டி வாழ்த்துக் கூறியுள்ளார் அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன்: நூறாவது மடல் பன்னூறாயிரமாகத் தொடர வாழ்த்துகள். 0 நன்றி அன்பரே! தொடர்ந்து 100 நாள் – ஒருநாள் கூட விடாமல் தாழி மடல் எழுதியுள்ளேன். தொடங்கும் போதே எடுத்துக் கொண்ட உறுதிதான்: என் இறுதி நாள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். ஒருசிலர் ...
image-47144

பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன்

பூங்கொடி முகப்புப் பாடல் பூங்கொடி கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் வரலாறு பேசுமொரு காப்பியமாம். பூங்கொடி மொழிகலங் கேடுறக் கண்டுளந் தளர்ந்தாள் விழிநலங் குறைவது போலவள் உணர்ந்தாள். உணர்ச்சி எழுச்சியாயிற்று - எழுச்சி வளர்ச்சியாயிற்று: அவள் வாழ்வே ஓர் அறப்போராயிற்று. முடிவு? செந்தமிழாம் மொழிகாக்கத் தனைக்கொடுத்தாள் செயிர்தீர்ந்த மொழிப்போரில் உயிர்கொடுத்தாள். அதனால் எங்கள் உடலுங் குருதியும் அவளானாள் உளத்தில் கொதிக்கும் அழலானாள்  மூச்சும் பேச்சும் அவளானாள்  மும்மைத் தமிழின் அணங்கானாள். அவள் வரலாறு கூறும் இப்பெருங்காப்பியம் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பேழை ...