(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
29/ 69
‘திறனாய்வாளராக உரையாசிரியர்கள்’(2020):
இலக்கிய இலக்கணப் புலவர்கள் மட்டுமல்லர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலானவர்களும் தமிழ்மொழி, இலக்கண, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கவர்கள் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.
“அன்னார் இலக்கியக் கல்வி மட்டுமின்றிப் பிற பலதுறையறிவும் ...