(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 5. தொடர்ச்சி)
அந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், 'அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ...