image-38646

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்!  உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.  “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.”   (திருவள்ளுவர், திருக்குறள் 70) என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் ...
image-38613

ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020

ஈழத்தின் விதைகள் - இளந்தளிர் 2020 இளந்தளிர் நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28ஆம் நாள், முதல் முதலாக நடைபெற்றது. பின்னர் 2006, 2007ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நிறைய அறைகூவல்களைச் ...
image-38609

விழியிடையில் வழிநடை தவறினேன்! – ஆற்காடு க.குமரன்

குழைந்து கிடக்கும் இடையில் மறைந்து கிடக்கும் மடிப்பில் புதைந்து கிடக்கிறேன் நான்   மூச்சு முட்டுதடி பேச்சு கெட்டதடி உச்சு கொட்டுதடி உள்வாங்கியவுன்னழகு   காற்று வீசூதடி  கண்ணில் தெரியுதடி சேலை விலகியே தேவை கூறுதடி   கைப்பிடி நழுவி கவிழ்த்தேன் கைப்பிடியிடையாலே கைப்பாவையானேன் நான்   குடம் சுமந்ததை குழவி சுமந்ததை என் மனம் சுமந்ததை அறியாயோ   இரவு உடையில் குருடாகும் விழிகள் மூடி மறைத்ததால் முறைக்குதடி  காற்று   சேலை செய்யும் சேவை காற்றால் திரைச்சீலை கண்கள் தீரும் தேவை   காட்சிப் பொருளல்ல கற்சிலை அல்ல காண்போரை கற்சிலையாக்கும் பொற்சிலை   பின்னில் சாளரம் முன்னில் கோபுரம் உச்சியில் சாமரம் மண்ணிலே தேவதை   ‘இரவிக்கை’யில் வைத்த சன்னலில் தோன்றாத மின்னல் இடையினில்   காற்றுதவ கைதட்டி ...
image-38599

மணிமுடி நோய்மியே! அழித்திடு தீயரை! – ஆற்காடு க.குமரன்

மணிமுடி நோய்மியே! அழித்திடு தீயரை!   ‘கொரோனா‘ வருதோ இல்லையோ கொஞ்சம் ஓய்வெடுக்கிறது கொள்ளி வாய்கள் அறிக்கை சொல்லாமல் அடக்கி ஆள்கிறது வாய்க்கவசம்   தூணிலும் துரும்பிலும் தூங்கும் கடவுள் தூங்கிக்கொண்டே தூதுவர்கள் தொல்லையின்றி   கொள்ளையர்களைக் கொண்டு போகட்டும் கொள்ளை நோய்   ஏழை உழைப்பாளியை ஏதூம் தீண்டுவதில்லை தீது நினையாதவனை யாதூம் நுகர்வதில்லை   ‘கொரோனாவே’ வருக. கொடியவர்கள் மடிய   துரோகிகளைத் தூக்கிலிடாது தூங்கும் மன்றம் தூசியாய் வந்து நீ தூக்கிலிடு   இல்லாத கடவுள் பெயரில் நில்லாத வன்முறை இல்லாமல் போக நீ இனிதே வருகவே   தீயவர்களை அழிக்க நோயாய் வந்து நீ தீயாயெரித்திடவே காற்றாய் வந்து விடு கவலைகள் போக்கி விடு   நம்பிக்கை உள்ளது நல்லவர்க்கு அழிவில்லை   கூடுமிடமெல்லாம் வெறிச்சோடி   மதுக்கடைகள் மட்டும் மக்கள் ...
image-38595

தமிழனே சொந்தக்காரன்! – ஆற்காடு க.குமரன்

தமிழனே சொந்தக்காரன்! வந்தாரை இருகரம் நீட்டி வரவேற்ற தமிழன்! வந்தார்கள் வென்றார்கள் கொன்றார்கள் வாய்க்கரிசி, வரவேற்க நீட்டிய கைகளில்! வாழ வந்தவனை வாழ வைத்து விட்டு வாழ வந்தவனிடம் வாழ வழி கேட்கும் வக்கற்ற தமிழனே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எடுத்துச் செல்பவன் பாடுகிறான் இருப்பவன் சுவைக்கிறான்! பிழைக்க வந்தவனால் பிழைப்பை இழந்து பிழைக்க வந்தவனிடம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் கூட்டம் சுவைத்துச் சுவைத்து நசிந்து போனவன் தமிழன் கைதட்டி தன் கைவரிகளைத் தொலைத்தவன் தமிழன் பொழுது போக்குகளில் வாழ்நாள் பொழுதைப் போக்கியவன் சிந்திக்கத் தொடங்கிய சில காலத்தில் சிகரம் தொடும் நேரத்தில் மலிவு விலை மதுக்கள் இலவச பொருட்கள் தன்னிலை அகதிகளாகச் சொந்த மண்ணில் குடியுரிமைச் சட்டம் தமிழ்க் குடியை காக்கும்! அண்டை நாட்டில் பண்டைத் தமிழன் மண்டை ஓடும் மண்ணில் இல்லை! எங்கள் நாட்டில் எந்நாட்டவரும் இல்லாமல் இல்லை! அடுத்தவனை நம்பி அவனை ஆதரித்து அவனை ஆராதித்து அகதியாய் ஆகாதீர்! தமிழ் மண்ணுக்குத் தமிழனே சொந்தக்காரன்! தமிழ்க் கோவில்களில் மட்டுமல்ல தமிழ்க் கோட்டையிலும் தமிழ் ஒலிக்கட்டும் அதைத் தமிழனே முழங்கட்டும்! உழைப்போம் தழைப்போம்! இவண் ஆற்காடு க குமரன், 9789814114
image-38591

யவனிகா-குவிகம் வழங்கும் அரங்கம்-கலைநிகழ்வு

பங்குனி 02, 2051 ஞாயிறு 15.02.2020 மாலை 5.00-7.00 தியாகராய நகர் என்றிக்கு இப்பசனின் பொம்மை வீடு -  A DOLL'S HOUSE அறிமுகம்சில காட்சிகள் திரையிடல்படைப்புகள் காணொளிகருத்துகள் பரிமாறல்  
image-38588

எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை? – ஆற்காடு.க.குமரன்

எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை? தீர்ப்பு எழுதியதும் தீர்ந்துபோகும் எழுதுகோல்  கூர்முனை செய்த குற்றம் என்ன? குற்றவாளிக்குக் கூட ஆயுள் தண்டனை இதற்கேனோ மரணத் தண்டனை?   வாய்மையே வெல்லும் முழக்கத்தோடு காந்தி. கண்ணைக் கட்டிய நீதி தேவதை காற்றில் பறந்த நீதி!.   இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
image-38584

கலையாத உம் புன்னகை! – ஆற்காடு.க.குமரன்

கலையாத உம் புன்னகை! கடைசிவரை கட்சி மாறாமல் கறை படியாமல் இறையாய் இரையானீர்!   சிலையமைக்க வேண்டும் விலைமதிப்பற்ற உம்மை   இலை போட்டுக் கனி வைத்து முரசு கொட்டினாலும் முடியவில்லை திசைமாறாத் தீக்கதிரினை பக்கத்திலிருந்த மலை முகடே நின் திசை மாறாது   திரு.க.அன்பழகன் கழகன் அழகன்   கதிரவன் அருகில் கலையாத உம் புன்னகை!   நட்புக்கு உப்பு .........நீர்   தம்பி அழைத்தார் எனத் தன்னிலை மறந்தாயோ முன்னிலை அவர் என்று முடிந்து போனாயோ!   மூத்த தலைவர்களில் முடிசூடா மன்னன் நீர் முடிசூட்டிக் கொள்கிறேன் உம்மையே முற்றிலும் உண்மையே!   பழக்கமில்லாத நான் பாடுகிறேன் உனக்காக எனும் போதே பாராட்டப் படக்கூடிய நிலையில் நீர்! பருகித் தாகம் தணிக்கிறேன் நான்!   இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
image-38581

உலகத்தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல்,11.03.2020

மாசி 28,2051 புதன் 11.03.2020 முற்பகல் 11.00 கூடலுரை: முனைவர் கா.சிரீதர் இரட்டைக் காப்பியம் - அதிகாரம், அரசியல், அரசு  
image-38577

பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்

மாசி 25, 2051 மார்ச்சு 08,2020ஞாயிறு மாலை 3.00பாவாணர் தமிழ்வழிப்பள்ளி வளாகம்,அட்டலக்குமி நிழற்சாலை, பள்ளிக்கரணை,சென்னை 600100பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கம்  
image-38573

தொழுகிறோம் உம்மை! – ஆற்காடு.க.குமரன்

தொழுகிறோம் உம்மை! ஆலமரத்தின் ஆணிவேர் சலசலப்பின்றி இலைகள் இமயம் சரிந்து இரு விழிகளில் நதியாய் இதழினிலுதிரும் இரங்கலும் ஈரமாய் நீர்.....தூரமாய்..... கலங்கரை விளக்கு விளக்கியதில் துலங்கிய கழகம் கலங்கி நூலகத்தில் தவங்கிடக்கும் நன்னூல்.....நின் முனை என்னகத்தில் பேராசிரியர் பேராண்மை மிக்க ஆசிரியர் உம்மைக் கண்டு ஆ......என அண்ணாந்து வியந்த சிறியர் யாம் தொன்னூற்று எட்டு வரை தொண்டு போதுமென துயிலிலாழ்ந்தீரோ! துணையினி யாரோ! நேரில் காணாமலே வேரில் நீர் வேறில்லை என்னில் ஈடில்லை மண்ணில் பொதுச்செயலாளர் பொதுவாகிப்போனீரோ தொடர்ந்து தொண்டாற்ற தொழுகிறோம் உம்மை! துணையாய், தூணாய். எண்ணி..... இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
image-38570

பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்!

இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர்(1962),நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்(1967-71), தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலானபொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர், இனமானப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப்படுபவர், திராவிடர் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய  க.அன்பழகனார், நலக்குறைவின் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் மரணம் உற்றார். அவரின் மறைவிற்கு இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், ...