image-33913

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   குவியாடி முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் ...
image-33910

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி

    சித்திரை 15, 2049  -  28.04.2018 மாலை 4,30 முதல் இரவு 9.30 வரை அருள்மிகு துருக்கை அம்மன் கோயில் வளாகம் பகரர் பூங்கா, சிட்டினி  (Regents Park, Sydney) தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018, சிட்டினி சிட்டினித்  தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியத் தமிழ்ச்சங்கம் ஓபன் தமிழர் கழகம்   பெருமைக்குரிய சான்றோர்கள் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கவிஞர் கண்ணதாசன்  
image-33906

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்

கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்   வணக்கம்.  சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018 மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  இலக்கியவீதி  அமைப்பும், திரு கிருட்டிணா இனிப்பகமும்  இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில் கவிஞர்  பிரமிள் பற்றிய  நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .   முன்னிலை ; இலக்கியவீதி இனியவன் தலைமை : கவிஞர் அழகிய சிங்கர் அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  ...
image-33901

திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி

திருக்குறள் திருவிழா, திருச்சிராப்பள்ளி திருக்குறள்திருமூலநாதன் அறக்கட்டளை 21 ஆம் ஆண்டு மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி சேவாசங்கம் மேனிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி சித்திரை 18, 2049, செவ்வாய், மே 01,2018 பூவை பி.தயாபரன் thirumulanathan@gmail.com www.sites.google.com/site/thirumoolanathand
image-33896

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை

ஒளவை தி.க.சண்முகம் பெருமங்கலம் 106, சென்னை சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் சித்திரை 13, 2049 வியாழன் ஏப்பிரல் 26, 2018 மாலை 5.30 இடம் - இராகசுதா அரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 கலை மேதை விருதுகள், தமிழ்ச் சான்றோர் விருதுகள், சுவாமிகள் நினைவு சிறப்பு விருதுகள்,  நூற்றாண்டு நினைவு விருதுகள் வழங்கல்
image-33891

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – குவியாடி

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?   விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக்கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை. ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் ...
image-33883

 வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! –      குவியாடி

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! -      குவியாடி ஒடுக்கப்பட்ட மக்களின் - பாரதியின் மொழியில் சொல்வதானால்  தணிந்த சாதியினரின் - நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில்    ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. ...
image-33878

கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்?  கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ' கலைமாமணி'. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன. கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு ...
image-33854

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39     ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ”! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை ...
image-33567

காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம் 7. தொண்டறம்.   1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல் கற்றார்க்(கு) உரிய அறம். 2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக் கொண்டறம் பேணிவாழ் வோம். 3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே எதிர்பார்க்கும் தொண்டாம் அறம். 4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை வள்ளுவன்கோல் கண்ட அறம். 5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி எழச்செய்வோம் தொண்டறத் தால். 6.மறத்தால் விழவில்லை ...
image-33833

வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய  மாநில அரசுகள்! இலக்குவனார் திருவள்ளுவன்

வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய  மாநில அரசுகள்!   இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து  வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட ...
image-33868

புத்தகங்களே படிக்கட்டுகள் – கவிஞர் மு.முருகேசு

புத்தகங்களே படிக்கட்டுகள்     வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும்  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியும் இணைந்து தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழா நடத்தின. இவ்விழாவில், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு குறிப்பிட்டார்.    இவ்விழாவிற்குப் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.   ...