குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம், அன்னையர் நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு, பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது.
வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு, பொறியாளர் நடராசன், பொறியாளர் முனைவர் பால் மனுவேல், பொறியாளர் ...