image-26553

இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்

இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! - அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து
image-26537

இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்

நந்தவனம் பீடம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர் புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.00 வரை வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன் தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம் வாழ்த்துரை : மு.க.முனியாண்டி சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் 'நான்கண்ட மியான்மர்' நூல் வெளியீடு கலைநிகழ்ச்சிகள் கவியரங்கம் தலைமை : முனைவர் கீரைத்தமிழன் விருது வழங்கல் & நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி நன்றியுரை : ...
image-26547

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்!     தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் ...
image-26550

மனிதம் – கமலா சரசுவதி

மனிதம் தலை சுமந்து உயிர்காக்கும், தன்மையது நல் மனிதம் ! உயிர் கொடுத்து உயிர்காக்கும், உணர்வே நல் மனிதம் ! செருக் கொழிக்கும் சிந்தையது, சிகரம் கொள்ளும் மனிதம் ! முருகவிழும் மொட்டுப் போலே முகிழும் மனங்கொள் மனிதம் ! துயரம் நிறைந்தோர் துயரேதீர்க்க, துடிக்கும் மனமே மனிதம் ! தோல்வியுற்றோர் துவளா நிலையைத் தோற்றுவித்தல் நல் மனிதம் ! வீட்டுப்பெண்கள் கொண்ட கருத்தை விரும்பிக் கேட்டல் மனிதம்! கொல்லும் பகையே என்றபோதும், கொஞ்சம் மன்னித்தல் அதுமனிதம் !   - ...
image-26448

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9   தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.   ...
image-26342

திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு  உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை.     சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால்,       உழந்தும் உழவே தலை.      உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய்.   உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து)      ...
image-26327

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்   1.முன்னுரை  – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 1.முன்னுரை - பிற்பகுதி   தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் ...
image-26313

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 28.அறிவுடைமை 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது. அறிவு பகைவரா லழிக்கப் படாதது. அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது. அறிவினை யுடையா ரனைத்து முடையர். அறிவினை உடையவர்கள் ...
image-26465

சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!

சென்னையில் 'தமிழ் உலகச் சந்திப்பு'க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!   உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி   உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம்,  பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு ...
image-26522

அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் ...
image-26532

மேதகு எசு.ஆர்.நாதன் நினைவேந்தல், சென்னை

சிங்கப்பூர் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு செல்லப்பன் இராமநாதன் நினைவேந்தல்   புரட்டாசி 14, 2047 / செட்டம்பர் 30, 2016 மாலை 5.30 இராயப்பேட்டை முனைவர் ம.நடராசன் இரா.நல்லக்கண்ணு முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் வாசுகி கண்ணப்பன் த.மூர்த்தி அக்கினி அ.இராமநுசம் பெ.கி.பிரபாகரன்
image-26525

கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக்   குழந்தை இலக்கியப் பரிசு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 'கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ...