image-32588

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 30 : ‘திருவாசகமும் நானும்’

ஐப்பசி 04, 2048 சனிக்கிழமை 21.10.2017 மாலை 6 மணி சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) இலக்கிய நிகழ்வு ‘திருவாசகமும் நானும்’ சிறப்புரை : சந்தியா நடராசன் அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு
image-32581

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு   வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன.  மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது ...
image-32550

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

  மறைமலையடிகள் 1/5 - கி.ஆ.பெ. மறைமலையடிகள் சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன். பிறப்பு : 1876இல் பிறந்த நாள் : சூலை 15 பிறந்த ஊர் :  காடம்பாடி வட்டம் : நாகப்பட்டினம் தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை இளமைப் பெயர் : வேதாசலம்  படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்  சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர் பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில் முதல் தோற்றம் : ...
image-32538

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்   சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)  வடக்கே வெள்ளாறு, மேற்கே பெருவழி, தெற்கே தெளிந்த ...
image-32533

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – வித்துவான். மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் 1-1-1899 என் தமிழாசிரியர் நாராயணசாமி(ப் பிள்ளை)யைத் திருவாரூர் சென்று கண்டேன். - மறைமலையடிகள் மறை. திருநாவுக்கரசு விளக்கம்: இவர் நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வணிகம் நடத்திவந்தவர். கள்ளர் குலத்தோன்றலார்; வெ.நாராயண சாமி(ப்பிள்ளை),  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளையின்) மாணவராவர். இவர் சிறந்த இயற்றமிழாசிரியர். அடிகள் தமது இளமைப்பருவத்தே இவரையடுத்து இவர்பால் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச் செவ்வையாகக் ...
image-32529

தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன்

தீவாளி, நல்விழா நாளா?  நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் ...
image-32524

துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! – கவிஞர் சீவா பாரதி

துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்!   வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் - புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் - ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் - அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன்! - அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் - நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் - இது நான்செய்த தவறாகுமா? - இல்லை நான்கற்ற முறையாகுமா? காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் - புதுப் பாடல்கள் பாடிடத் துடித்தேன் - ஆனால் கடற்கரை அலைகளில் கரைந்திடும் ...
image-32544

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

(நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 தொடர்ச்சி) நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3   கடவுளைப் பூசிப்பதில் தமிழர்களுக்கே உரிய தனித்தகுதிகள்!   “தமிழர்களுக்கு எனத் தனிச் சமயம் கிடையாது. இந்து சமயமே தமிழர் சமயம்! தமிழர்கள் இந்துக்களே! தமிழ்ச் சமயம் என்பதும் இந்து சமயத்தின் ஒரு பகுதியே!” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள் இந்து ...
image-32487

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: இது ஒரு வாழ்வா?

புறநானூற்றுச் சிறுகதைகள் 2. இது ஒரு வாழ்வா?     சோழ மன்னன் செங்கணானுக்கும் சேரமான் கனைக்கால் இரும்பொறைக்கும் நிகழ்ந்த போரில் சோழன் செங்கணான் வெற்றி பெற்றுவிட்டான். தோற்றுப்போன கணைக்கால் இரும்பொறையைச் சிறை செய்து சோழ நாட்டின் தலைநகரில் இருக்கும் குடவாயில் கோட்டத்துச் சிறைச்சாலையில் அடைத்தும் விட்டான்; பெரு வீரனான சேரமானைக் கைதியாக்கித் தன் சிறையில் கொணர்ந்து அடைத்ததனால் இணையற்ற ...
image-32483

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)  இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: - இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும் இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு அருட்தன்மை எல்லேரர்க்கும்.காட்டுவதாய் இல்லை அவரவர்கள் தம்பெயர்க்கே ...
image-32476

ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு

ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற   கவிஞர் மு.முருகேசு   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.    சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ ...
image-32519

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3   கடவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?...  கடவுள் மீது அன்பு(பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு ...