image-32512

“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்

தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலையடிகளின்  25.10.1937 ஆம் நாள், குறிப்பு .  : ‘‘நாட்டுக்கோட்டைத் தியாகராசச் செட்டியார் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ இதற்கு மறைமலையடிகளாரின் மகனார் மறை திருநாவுக்கரசு தரும் விளக்கம் :  இவரைத் (தியாகராசச் செட்டியாரை) தமிழ்ப் புலவர் என்றே கூறிவிடலாம். புலவர்கள் பால் அன்பும் உதவியுமுடையவர். இன்று தமிழ்நாட்டின் தனிப் பெருஞ்செல்வர் அடிகள் நூல்களை இன்றும் நாடோறுங்கற்கின்றார். மதுரையில், ...
image-32515

இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்  – தமிழ் ஓவியா

இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் ஆந்திராவில் - 29 ஊர்கள் அருணாசலப் பிரதேசத்தில் - 11 ஊர்கள் அசாமில் - 39 ஊர்கள் பீகாரில் - 53 ஊர்கள் குசராத்தில் - 5 ஊர்கள் கோவாவில் - 5 ஊர்கள் அரியானாவில் - 3 ஊர்கள் இமாசலப்பிரதேசத்தில் - 34 ஊர்கள் கருநாடகாவில் - 24 ஊர்கள் மகாராட்டிரத்தில் - 120 ஊர்கள் மேகாலயாவில் - 5 ...
image-32455

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள்  அஇஅதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதுபற்றி இங்கே  ஆராயவில்லை. அவர் குற்றவாளியாக இருந்தால் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பெறும் உரிமைகளும் வாய்ப்பு நலன்களும் அவருக்கும் வழங்கப்பெற வேண்டும். அவர் குற்றமற்றவராக இருந்தால் பிற குற்றமற்றவர்களுக்கு வழங்கப்பெறும்   நயன்மைநிலை / நீதி  நிலைவாய்ப்பு அவருக்கும் வழங்கப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.   ...
image-32507

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!

'தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்! வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே!   எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய ...
image-32501

வாசிப்புப் போட்டி 2017

வாசிப்புப் போட்டி – 2017    வாசிப்புப் போட்டி 2017 யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர். எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை ...
image-32470

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: ஒரு சொல்

புறநானூற்றுச் சிறுகதைகள்  நா. பார்த்தசாரதி 1. ஒரு சொல்   உறையூரில் சோழன் நலங்கிள்ளியின் அரண்மனை. ஒருநாள் மாலைப் பொழுது நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரும் பொழுது போகச் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாமப்பல் கண்ணனாருக்குச் சொக்கட்டான் விளையாட்டில் அதிகமான பழக்கமோ திறமையோ கிடையாது. ஆனால், அவரோடு விளையாடிக் கொண்டிருந்த மாவளத்தானுக்கோ அடிக்கடி அந்த விளையாட்டை ...
image-32473

தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் – சேசாத்திரி சீதரன்

தமிழ் மொழி மீட்புப் போராளி இராமலிங்க அடிகளார் ‘தமிழ் மொழி மீட்புப்போராளி’ இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் புரட்டாசி 21, தி.பி. 1854 / 5.10.1823  ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிக்காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனைத் தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னைப் புதுப்பித்துக் ...
image-32464

பேராசிரியர் கா.சு.(பிள்ளை) – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் கா.சு.(பிள்ளை)   ஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர்.  திராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர்.  தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை  சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர்.  நீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான ...
image-32461

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் - விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்     வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது... மணலையிழந்த ஆறு!   பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின... தனித்தனியான விண்மீன்கள்!   யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்... மூங்கில் வனத்தினுள்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
image-32459

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) மதம்வேண்டாம் சாதிவேண்டாம் மார்க்கம் ஒன்றே மனிதருக்குள் உலகத்தில் இருந்தால்போதும் கதகதப்பாய்க் குளிர்காய அமைத்தார் கீழ்மைக் கயவர்கள்தாம் சாதிமதச் சமயச் சண்டை! பேதமில்லை பிரிவில்லை பிரிவால்.வையப் பட்டினிகள் ஒழியவில்லை! பின்ஏன் இந்த இதமில்லா மதப்பிரிவு எண்ணிப் பாரீர் எல்லாரும் மனிதமதம் உரிமை ஒன்றே!   என்றெல்லாம் வியத்தகுநல் கருத்தைச் சொன்ன ஈரமிகு வள்ளலாரின் கொள்கை பற்றி நன்றி யுடன் ...
image-32447

புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு

கார்த்திகை 20 & 21 . 2048  / புதன் & வியாழன் 6 & 7 .12.2017 ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,   புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு   மாநாட்டின் ஒரு பகுதியாகச் சீவகுமாரனின் 10 நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பெற்று அவற்றின் அதன் மீது கலந்துரையாடலும் நிகழும். ஈரோடு கலை- அறிவியல் கல்லூரியினர் தங்குமிட வசதியையும் ...
image-32422

நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்?   செயலலிதா முதல்வராகச் செயலபட்ட பொழுதே அவர்  நோய்க்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.  பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றும்  ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களை வெவ்வேறு நாளில் எடுக்கப்பட்டனபோல் காட்டி அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வந்தன. இவை யாவும்  செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே நோய்வாய்ப்பட்டு ...