(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.)
2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)
உலகமனிதன் முதலில்
உதித்ததுவும் உன்குடியா?
நிலம் உன்னைப் புரிந்துகொள்ள
நிமிர்ந்துநிற்க மாட்டாயோ?”
தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார்.
இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால்
இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே
உடைபட்ட கலத்தைப் ...