சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 7
ஆசானும் நன்னீரும்
தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும்,
பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும்
தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் ,
பள்ளியனும் நன்னீரும் ஒன்று.
பொருள்:
ஆசிரியர்:
1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார்.
2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம் தீர்க்கப்படுகிறது.
3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது.
4)ஆசிரியர் ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் ...