சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 6
பைந்தமிழும் தாய்மையும்
சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம்
வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங்
கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும்
எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று.
பொருள் :
1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் .
2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும்.
3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் ...