image-29230

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன   தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும். அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும். ...
image-29240

பனுவல் வழங்கும் குமுகாய நீதி நிகழ்வுகள் : ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்

  பனுவல் வழங்கும்  குமுகாய நீதி நிகழ்வுகள் ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்   நூல்கள் வெளியீடு திரைக்காட்சி உரையாடல்  
image-29170

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக?  ஓர்ந்துகண்  ணோடாது  இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (திருவள்ளுவர், திருக்குறள் 541)  வழக்காயினும், சிக்கலாயினும் வேறு தீர்விற்கு உரியதாயினும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பாராதே! எப்பக்கமும் சாயாமல் நடுவுநிலையோடு அணுகுக! வழங்கவேண்டிய தீர்ப்பை ஆராய்க! அதனைச் செயல்படுத்துக! அதுவே உண்மையான நீதியாகும் ...
image-29233

தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்

தமிழ்த்தாய் வணக்கம் 1-5   நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப் பலகாலந் தொட்டுப் பருவங் குலையா திலகுதமிழ்த் தாயே இனிது   என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர் இதழ்வாழும் தாயே இனிது   உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க ஆதித் தமிழே அழியாத தத்துவமே சோதிப் பொருளே துதி.   காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ் சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத் தெய்வ அருளும் ...
image-29236

தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன்

தமிழின்பம் தனி இன்பம் 1/3   வள்ளுவப் பெருந்தகை, தமிழ் இன்பம் எத்தகையது என்பதை ஓர் உவமை வாயிலாக விளக்கிக் காட்டுகிறார். பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு எப்படிப்பட்ட இன்பம் தரும்? படிக்கப் படிக்கச் சிறந்த நூல்கள் தரும் உள்ளார்ந்த இன்பம் போலப் பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு இன்பம் தரும் என்று கூறுகிறார். முதல்முறை படிக்குங்கால் ...
image-29225

இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு, சென்னை

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு    போட்டித் தேர்வுக்கு  ஆயத்தமாகும் மாணவர்களுக்கென  இ.ஆப., இ.கா.ப., இ.வ.ப., (இந்திய வனப்பணி)  முதலான  அனைத்து இந்தியப் பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்களுடன் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.
image-29220

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைக் கொண்டாட்டம், சென்னை

குழந்தைகளுக்கான கோடைக் கால முகாம்   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தைகள் நலனுக்காகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ‘கோடைக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை சொல்லி,    இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், ஓகம்(யோகா), ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா,  புத்தகங்களைப் பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி, ...
image-29215

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் பொன்மாலைப் பொழுது

  பொன்மாலைப் பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்மிகு இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு  வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.  ஏப்பிரல் மாதத்தில் கீழ் வருமாறு  ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி 19,2048 / 01.04.2017 : திரு நெல்லை செயந்தா பங்குனி 26, ...
image-29203

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு – அ.கி.பரந்தாமனார்

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு   தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவற்றுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில் புகுந்திருப்பதேயாகும்.   வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த தவஞானச் செல்வரான சிவஞானயோகிகளும், வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்த மொழிநூலறிஞர் முனைவர் பி. எசு.சுப்பிரமணிய (சாத்திரியாரும்) பிறரும், ...
image-29196

காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!

காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017 காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்! காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம். இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ ...
image-29173

கடலூரில் தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா

  தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா, கடலுார் கடலூர் மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் திருப்புமுனைப் பயிற்சி நடுவத்தில்  நடைபெற்றது. பேரா.இராச.குழந்தை வேலனார் தலைமை தாங்கினார்.  'தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள்' என்னும் தலைப்பில் முனைவர் க.தமிழமல்லன் சிறப்புரை நிகழ்த்தினார். புலவர் சிவ.இளங்கோவன், கதிர்.முத்தையன் ஆகியோர் பாவேந்தர், பாவாணர் அளித்த தனித்தமிழ் இயக்கப் பங்களிப்புக்குறித்துப் பேசினர். முன்னதாகப் படத்திறப்பும் பாவரங்கும்  நடைபெற்றன.