image-22457

சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தன!

சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தன!     சங்கக் காலத்துப் புலவர்களின் இலக்கிய வன்மை மென்மைகளைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது, அளக்கமுடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும், ஒன்று பாடியோர் பாவின் வனப்பும் சங்கத் தன்மையுடையனவாகவே உள. நூல் நூறு எழுதியோர் திறஞ்சான்றோர் எனவும், தொல்காப்பியர் திருவள்ளுவர் இளங்கோபோல நூல் ஒன்றே ...
image-22463

திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை

திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர்     தமிழ்நாட்டில் விசயநகர அரசர்களின் சார்பாளர்கள்(பிரதிநிதிகள்) 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் தலைமுறையினர் தென்பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விசயநகர ஆட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் ...
image-22371

தாய்க்கோழியின் வருத்தம் – தமிழ்சிவா

தாய்க்கோழியின் வருத்தம்   காடடைப்பான்1 தூக்கிச் செல்லுமோ என்றஞ்சிய தாய்க்கோழி, வேலியில் ஊர்ந்த பாம்பு கௌவிய குஞ்சை மீட்கக் கொக்கரிக்கும். என்நெஞ்சைப் படம்பிடித்து, நெடுமென வளர்ந்த கருமுள் முருக்கம் சிவப்பாய்ப் பூக்கும். அந்தி மந்தாரை அனைத்தும் கலங்கடிக்கும். பந்தல்கால் சுற்றிய பசுநிறக் கொடியில் பவழ மயிர்மாணிக்கம் பார்க்கும். கையெழுத்து  மறையும் வேளையில், அங்கே சேச மலையில் சிவப்பு மரத்தைச் சிரத்தையுடன் சீவிக் கொண்டிருப்பாய், இங்கே பால்சுவை பருகிய பூனைகள் சிவப்பாய் மொடமொடக்கும் காகிதக் கட்டுடன், அங்கே சுட்டு ...
image-22388

தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்! – வ.சுப.மாணிக்கம்

தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்!   தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத்திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன். புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்; விரும்பியவர் அவனுக்கெனத் தாமே ...
image-22410

மாணிக்கவாசகம்பள்ளி மாணாக்கரின் வாக்காளர் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள்

மாணிக்கவாசகம் பள்ளிமாணாக்கரின் வாக்காளர் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள்   பள்ளி மாணவர்களின் நாடகம்,கும்மி நடனம்,கவிதை,ஆங்கில பேச்சு  100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு   தேவகோட்டை - தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசுஉதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக நடராசபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக 100  விழுக்காட்டு  வாக்காளர் விழிப்புணர்வினை வலியுறுத்திக்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.     நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை ...
image-22385

உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா

அருவிக்கரை அன்று கண்ட அருவிக்கரையே! பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்; படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய். வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்; வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்! சிறுவனாக உன்மேல் குதித்தேன்; சீரிய உந்தன் அழகை மதித்தேன். வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க, விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்!   -கெர்சோம்செல்லையா
image-22429

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்   சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம் மறைமலை இலக்குவனார்,  செயலர், தமிழகப்புலவர் குழு, சென்னை 600 ...
image-22404

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும்  ஒளிப்படப் போட்டி!   கோவை  இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த  முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு  ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.  போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம்.  யார் ...
image-22425

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4. மெய்யைத் தொழுதல்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்  மெய்யறம் (மாணவரியல்) 4.மெய்யைத் தொழுதல் மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள் உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும். உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது. உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும். அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது. உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது. பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது. உண்மை, ...
image-22380

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்: மறைமலை இலக்குவனார்

மாம்பலம் ஆ.சந்திரசேகரின்  “வைகறை வண்ணங்கள்” ---நூலறிமுகம்    ‘கவிதை என்பது கருத்துகளை விளக்கமாக மனத்தில் தைக்கும்படிக் கூறுவது.’ ‘வாழ்வின் எதிரொலியே கவிதை’ சமகால வாழ்வின் சரியான படப்பிடிப்பு’ என்றெல்லாம் கவிதையைப்பற்றிய  எண்ணற்ற விளக்கங்களும் வரையறைகளும் வழங்கிவருகின்றன.   குழந்தையின் குறுநகை ஒரு கவிதை; காலைக் கதிரவனின் கோல எழில் ஒரு கவிதை; மாலைநிலாவின் மயக்கும் எழில் ஒரு கவிதை ...
image-22399

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்!

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்   வெளியூர்  பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்குச் செல்லும்  பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க  இசைவில்லை.   மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்குக் குழு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசுப் ...
image-22396

பாவிற்கு வேண்டிய நயங்கள் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

பாவிற்கு வேண்டிய நயங்கள் சொன்னயமும் பொருள்நயமும் அணிநயமும் கற்பனையாச் சொல்லா நின்ற நன்னயமும் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும் எந்நயமும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்