image-22518

இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 74, திருவாரூர்

சித்திரை 07, 2047 / ஏப்பிரல் 20,2016 மாலை 6.30 தலைமை : இல.சொ.சத்தியமூர்த்தி தலைமைக்குற்றவியல் நடுவர், திருவாரூர் இலக்கிய உரை இசையரங்கம் மாணவரரங்கம் எண்கண் சா.மணி இலக்கிய வளர்ச்சிக்கழகம்
image-22502

த.இ.க.க. – தகவலாற்றுப்படை – தொடர் பொழிவு 14

சித்திரை 09, 2047 / ஏப்பிரல் 22,2016 மாலை 3.30 த.இ.க. கலையரங்கம், சென்னை கவிஞர் இரா.பச்சியப்பன் : நவினக்கவிதைகளின் வழியே நம்மைப் புரிந்து கொள்ளுதல் அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com  அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org
image-22497

அறம் காப்பார் அடுத்த முதல்வர்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அறம் காப்பார் அடுத்த முதல்வர்! அரசு அலுவலகம் அனைத்திலும் இங்கே, முரசு கொட்டியே கையூட்டு கூத்தாடும், அசுரகுல மாந்தர் அங்கு பணியாற்ற, அனைத்து குலமாந்தர் நலமும் பாழாகும்! ஆட்சி அதிகாரம் மாற்றம் கண்டாலும், காட்சி மாறாத கோலம் அங்கென்றும்! ஆற்று மணலென்று மக்களை எண்ணி, அங்கு நாள்தோறும் சுரண்டல் அரங்கேறும்! ஆண்டு ஐம்பதைக் கடந்த பின்னாலும், அவலம் மாறாத கொடுமை நாள்தோறும்! அதனை எண்ணி மனம் வெம்பும் அனைவர்க்கும், அரிய வாய்ப்பாக அமையும் ...
image-22493

புலமையின் இயக்கம் வ.சுப. மாணிக்கம் – மு.இளங்கோவன்

புலமையின் இயக்கம்  வ.சுப. மாணிக்கம்        எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக்கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம்மாணவர்களின்நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; ...
image-22489

மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! – முனைவர் அ. அறிவுநம்பி

மாணிக்கனாரின் சொல் நேர்த்தி!   எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும். சிலப்பதிகார இலக்கிய மேடை ஒன்றில் உதிர்க்கப்பெற்ற சில சொற்களை இங்கே அடுக்கிப் பார்க்கலாம். 'கோவலன் இறந்தவுடனேயே கண்ணகியும் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கள்வன் ஒருவன் இறந்தான் என்பதற்கு நாணி கள்வி ஒருத்தியும் மறைந்தாள் எனப் பேசப்பெறுமே ...
image-22470

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் - கனடிய எதிர்க்கட்சி  ஏற்றது.   ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக  உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு:  சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ)  கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ...
image-22482

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 – கி. வெங்கட்ராமன்

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3     இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது.   ஆனால், இதே காலப்பகுதியில்தான் முசுலிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப்பண்டவத்திற்கு(சிகிச்சைக்கு) ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான்வாயிலில்(கேட்டில்) ...
image-22377

தெளிந்தவர் வாக்கு

தெளிந்தவர் வாக்கு கொடுக்கப்பட்ட புகார்களை வரிசையாய் எண்களிட்டு வாகாய் அடுக்கிவைக்கும் காட்சிக் கூடமொன்று கண்டுகளிக்க உள்ளதெனக் கண்டவர்கள் சொன்னார்கள்! கயமைத்தனத்தைக் குத்தகையெடுத்துக் கழிபேருவகை எய்தியோர் களிநடம் புரிய அரங்குகள் அமைத்துத்தரும் ஆணையம் உண்டென்று அறிந்தவர்கள் சொன்னார்கள்! சீர்திருத்தம் எனச்சொல்லி ஓர்திருத்தமும் செய்யாத நாடறிந்த நல்லோரவை நம்நாட்டில் உண்டென்று நன்கறிந்தோர் சொன்னார்கள்! தப்படியும் சேப்படியும் ஒப்பில்லாமல் செய்தவர்கள் எப்படியும் வெற்றிபெற்றுக் கறைவாழ்வு வாழ்ந்திடவே கலங்கரை விளக்கமாய்க் கலங்காது பணியாற்றும் மெத்தபடித்த மேதையோரவை இத்தமிழ் நாட்டிலும் உண்டெனும் உண்மையைத் தெளிந்தவர்கள் சொன்னார்கள் தேர்தல் ஆணையமென்று! தமிழ் சிவா
image-22466

திருக்குறளை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் உரை

. திருக்குறளை இந்தி முதலான அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! - அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டி ஆளுநர் உரை   உத்தரகாண்டு மாநிலத்தில் உள்ள அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. தமிழார்வலரான நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் முயற்சியின் பேரில் இந்தச் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக அவர், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உரூ.200 ...
image-22461

மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்! – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை “உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைத்துள்ள அறிக்கைப்படி மாநில அரசு சாராயத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்காவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை ஏற்படுத்தும்” எனத் தமிழக அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.   குமுக(சமூக) நீதிக்கான அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் கே.பாலு. அவர், ...
image-22478

நாக்கு வாய்க்குள் முளைத்த கொம்பு – பழநிபாரதி

நாக்கு அசிங்கமானது அபாயகரமானதும்கூட! அது வாய்க்குள் முளைத்த கொம்பு துருப்பிடித்த கத்தி தீட்டப்பட்ட அரிவாளும்கூட! சில நேரம் தனது எச்சிலை தன்மீதே துப்பிக்கொள்ளும் இப்போது நாம் இது குறித்துப் பேசுவோம் இதுவே சரியான தருணம் - பழநிபாரதி