(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)
8
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிய கவிஞர்கள் அனைவரும் தமிழ் மொழியின் சிறப்பையும் மறுமலர்ச்சியையும் சமூகச் சீர்திருத்தத்தையுமே தம்முடைய கவிதைக்குக் கருப்பொருளாகக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக புலவர் குழந்தை, இ.மு. சுப்பிரமணியபிள்ளை, சாமி. சிதம்பரனார், வாணிதாசன், ச. பாலசுந்தரம் ஆகியோர் எழுதிய கவிதைகளைக் குறிப்பிடலாம். ...