image-11520

தமிழ் அன்னை- – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

தமிழ் அன்னை அன்புருவான தமிழ் அன்னை - மொழி  அரசியான தமிழ் அன்னை  இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை - எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை  ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் -  இயல்  அழகு சொட்டும் பசு வளர்த்தாள்  வீறுய் மிகுந்த படை வளர்த்தாள்  - ஞான  வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்.   - கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்
image-11531

இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்

உள்ள வெள்ளம்   ஊற்றென உளத்துள் தோன்றும் .. உணர்வுகள் தொண்டை சேருங் காற்றினை உதறச் செய்து .. கவிதையாய் உதட்டுக் கீனும்; ஏற்புடைத் தரத்தில் உண்டா .. இலக்கணம் சரியா என்று சாற்றிடும் போதென் நெஞ்சம் .. சரிவரப் பார்ப்ப தில்லை (1) மீட்டிடின் நீளும் நாதம் .. முதற்செவி சேரும் முன்னர் ஊட்டிடும் விரலி னூடே .. உணர்வினால் உள்ளம் சேர்ந்து காட்டுமோர் மோக மாயை, .. காண்கையில் மயங்கும் போது கூட்டியோ குறைத்தோ ...
image-11501

செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மொழி முப்பெரு  வேந்தர் வளர்த்த மொழி மூப்பே இல்லா இளமை மொழி காப்பியமைந்து கொண்ட மொழி - தொல் காப்பியம்  கண்ட தொன்மை மொழி பரணி பாடிய பண்டை மொழி தரணி போற்றும்  தண்மொழி அகநானூறு தந்த அருமொழி புறநானூறு தந்த புனித மொழி வள்ளுவன் கம்பன் வளர்த்த மொழி  உள்ளம் கவர்ந்த உயர்ந்த மொழி வல்லினம் ,மெல்லினம் இடையினமும் இயல், இசை, நாடக முத்தமிழும் முதல், ...
image-11499

கருகும் தென்னை மரங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் கருகும் தென்னை மரங்கள்  தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள் கருகுவதால் உழவர்கள் வேதனை அடைகின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, மஞ்சளாறு அணை, சில்வார்பட்டி, குள்ளப்புரம், கெங்குவார்பட்டி   முதலான பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால் அரசின் புள்ளிவிவரப்படி ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் கருகின. இதனால் ...
image-11497

மாம்பூவில் நோய் தாக்குதல்- உழவர்கள் கவலை

      இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது.      சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் ...
image-11491

சங்கரமூர்த்திபட்டியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு

சங்கரமூர்த்திபட்டிப் பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு   தேவதானப்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.   முதலக்கம்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், வைகைப்புதூர் பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மின்பொறிகள் மூலம் தண்ணீரைத் திருடுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் ஆற்றின் அருகே மின்இணைப்பு பெற்றுத் ...
image-11488

எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!

எழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க!     காலங்கள்தோறும் தமிழுக்குக் கேடு செய்வோர் இருந்துகொண்டுதான் உள்ளனர். ஆனால், இப்பொழுது இணைய வசதிகளையும் ஊடக வாய்ப்புகளையும்கொண்டு அழிப்புப்பணிகளை விரைவாகச் செய்து வருகின்றனர். தமிழ்க்காப்பு உணர்வாளர்களில் ஒரு சாரார் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதி காக்கின்றனர். மற்றொரு சாரார் இதைப்பற்றிக் கவலைப்படாமல் வீர உரையாற்றினால் போதும் என வாளாஉள்ளனர். ...
image-11478

எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      தமிழைப் பாதுகாப்பதாகவும் பரப்புவதாகவும் கூறிக் கொண்டு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு எழுத்துச் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் பிற அனைத்து மொழிகளுடனும் ஒப்பிடுகையில் மிகச் சிறந்ததாயும் அறிவியல் முறையில் அமைந்ததாயும் உள்ள ஒரே வடிவப் பாங்கு தமிழ் மொழிக்குரிய வரி வடிவ அமைப்பாகும். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத ...
image-11475

முடித்த பணியைப் புதுப்பணியாகக் காட்டும் பொதுப்பணித்துறையின் ஊழல்!

தேவதானப்பட்டிப் பகுதிகளில் நடைபெற்ற பணியினை மீண்டும் மீண்டும் செய்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பொதுப்பணித்துறை!     தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கண்மாய் ஏற்கெனவே குளத்தில் உள்ள கரைகளை மேம்படுத்திச் சீராக வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அப்பகுதியில் உள்ள உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.இப்பொழுது பொதுப்பணித்துறை, ஏற்கெனவே செய்த வேலையை மீண்டும் உடைப்பு இயந்திரம் கொண்டு கரையை ...
image-11472

கொள்ளை போகும் இசுலாமிய அறக்கொடை – வைகை அனிசு

கொள்ளை போகும் வக்பு வாரிய நிலங்கள் மீட்டெடுக்கப் பல்வேறு அமைப்புகள் போராட்டம்   உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துகள் உள்ள நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பது இந்தியாதான்.  வக்பு என்ற அரபிச் சொல்லுக்கு அருப்பணித்தல் என்று பொருளாகும். இந்தியாவை ஆண்ட சுல்தான்களால்   இம்முறை உண்டாக்கப்பட்டு முறையாகப் பேணப்பட்டு வந்தது. இந்தியாவில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களைப்   ...
image-11464

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள்

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, வைகை அணை, செயமங்கல் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்களை உடைத்துவிட்டு புதிய பாலங்களைக் கட்டுகின்றனர். இவ்வாறு கட்டப்படும் பாலங்கள் தரமற்றவையாக உள்ளன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   தரைப்பாலங்களில் பைஞ்சுதைக் குழாய்களை(சிமிண்ட்டு) வைத்து அதன்மேல் எந்த விதக் கலவையும் போடாமல் வெறும் சல்லித்தூசிகளைக் ...
image-11448

சிறகினில் திசைகளையள!- முனைவர் அண்ணாகண்ணன்

முடிமுடிமுடி செயலே! இனிதினிதினிதினிதினிதினிதினிது எமதெமதெமதெமதெமதெமதெமது அமுதமுதமுதமுதமுதமுதமுது எமதெமதெமதெமதெமதெமதெமது சரிசரிசரியென,சரிவரும்உலகு சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது அரிதரிதரிதரிதரிதரிதரிது சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு சிறகினில்திசைகளையளப்பதுமழகு சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு கருவுறுதிருதருவரகவிமதுரம் துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம் பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம் மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம் கடகடபடபடமடமடவெனவே சடசடதடதடகிடுகிடுவெனவே உடனுடனுடனுடனுடனுடனுடனே முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே!   நன்றி - வல்லமை (http://www.vallamai.com/?p=55610)