image-18286

புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்குச் சமூக இலக்கியச் சுடர் விருது

   புதுவைக் கவிதை வானில் கவிமன்றம் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அவரின் சமூக, இலக்கிய பணிகளைப் பாராட்டிச், சமூக இலக்கியச் சுடர் விருது வழங்கப் பட்டது.        விருதினை புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் முனைவர் சந்திரன் வழங்கினார்கள். உடன் கவிதைவானில் கவிமன்ற ...
image-18308

‘நாங்கள்’ யார்? – அ.ஈழம் சேகுவேரா

‘நாங்கள்’ புசிப்பது தசை புணர்வது பிணம் முகர்வது இரத்தம் நாற் சுவர்களுக்குள் நடப்பதை நாற்சந்தியில் நடத்துவோம் அது ‘தாரமாக’ இருந்தாலும், மூலை முடுக்கெல்லாம் தேடி ஒதுங்கமாட்டோம் ‘தங்கை’ ஒருத்தி இருந்தால் அம்மணமாக்கி இரசிப்போம் ‘தோழி’ ஒருத்தி கிடைத்தால் அதிரப்புணர்வோம் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்தால் ‘தாயையும்’ கூட்டாகப் புணர்வோம் ‘அக்காளை’ நீலப்படம் எடுத்து காசு பார்ப்போம் ‘நாங்கள்’ யார்? பிரித்தானியாவின் ‘அலைவரிசை 4’ பார்த்திருந்தால், எங்கள் ‘குலம் கோத்திரம்’ பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை! தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா (இலங்கை, முல்லைத்தீவிலிருந்து) கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு: wetamizhar@gmail.com eezhamcitizen@gmail.com
image-18304

கடவுள் மொழிபேசும் கடவுள் – இரா. சத்திக்கண்ணன்

கடவுள் மொழிபேசும் கடவுள் என் கவனம் விழ கிட்டே தத்தித்தத்தி ஓடிவந்து கடவுள் மொழியில் பேசுகிறது வா வாவென கைகள் நீட்டுகையில் வெட்கப்பட்டு கண்களையும் கன்னங்களையும் மூடிக்கொள்கிறது அவ்வப்போது முன்தலையையும் மறைத்துக்கொள்கிறது சற்று கை நகர்த்தி இருக்கேனா ? என்று அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது நான் பார்க்காததுபோல் நடிக்கும்போது உற்றுப்பார்க்கிறது துளிசத்தம் எழாமல் கைகொட்டுகிறது நான் சட்டென்று பார்க்கையில் அம்மாவின் பின்னால் ஓடி ஒளிந்துகொள்கிறது நான் நகரும்போது கண்ணில் ஏக்கம் தெறிக்க வழியனுப்புகிறது கையசைத்து! கடவுள் மொழிபேசிய கடவுள்!! - இரா. சத்திக்கண்ணன் தரவு: முதுவை இதாயத்து
image-18449

இந்திய நாகரிகம் தமிழரதே யாதல்! – பாவாணர்

வேதத்தை அடிப்படையான வரலாறு தவறானது!   வேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 - 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய ...
image-18327

பிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்

  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.   அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ...
image-18273

திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து  நோய்கள் வரும்முன் காக்கும்,   வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்      வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று,        நிறையினும், குறையினும் நோயே.   ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து),      அற்றது, போற்றி உணின். 'மருந்து”என, வேண்டாம், உணவு        முழுதும் செரித்தபின் உண்டால்.   அற்ஆல் ...
image-18267

திருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 094. சூது பரம்பரைப் புகழ்,பண்பு, மதி,அன்பு பொருள்கெடுக்கும் சூதை விடு. வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம்,      தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.  மீன்விழுங்கிய தூண்டில் இரைதான்          சூதில் வருவெற்றி; வேண்டாம்.   ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல்      நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு?  ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும்        நன்றுஆம் வாழ்வு உண்டாமோ?        உருள்ஆயம் ...
image-18240

திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.     உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்    கள்காதல் கொண்(டு)ஒழுகு வார்.       கள்ளைக் காதலிப்பார் எப்போதும்        அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.   உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்      எண்ணப் படவேண்டா தார்.      ...
image-18246

கதிரவேலு மரணம் தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பு

   மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ‪  ஆறுபதின்மங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா ...
image-18238

திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர்.   பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார்,      இன்சொல் இழுக்குத் தரும்.      அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும்        பரத்தையின் இன்சொல் இழிவுதரும்.       பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர்,      நயன்தூக்கி, நள்ளா விடல்.      பெறுபயன் ...
image-18251

வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்

  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் ...
image-18236

திருக்குறள் அறுசொல் உரை – 091. பெண்வழிச் சேறல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் மிகுகாமத்தால் அடிமையாகி, மனைவியின் மொழிவழிச் சென்று அறம்மறத்தல். மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்,      வேண்டாப் பொருளும் அது.       பெண்வழி நடப்பார், பயன்அடையார்;        நல்செயல் வல்லார், விரும்பார்.   பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர்      நாணாக நாணுத் தரும்.   மனைவிக்கு அடிமை ஆகியார்        ...