நாணுத்தரும்

-       முனைவர் ஔவை நடராசன்   ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம்  முதலான மொழிகள்  தோன்றின என்பது மொழி நூலாரின் முடிபு. இன்றும் சிலர் ஆங்கிலச்  சொற்களையும் பிற மொழிச் சொற்களையும் தமிழ் உரையாடலில் இழைய விடுதலால் இனிய தமிழ்ச் சொற்கள் ...
image-35

மீனியல் (Icthyology)

-       பேரா.முனைவர்  இலக்குவனார் மறைமலை 'பெரிதே உலகம் பேணுநர் பலரே' என்று கூறிச் செலினும், இந்நிலப்பரப்பு மும்மடங்கு நீரால் சூழப்பட்டது என்று அறிந்தமையின் ''ஆழிசூழ் உலகம்'' என அறைந்து சென்றனர் நம் முன்னோர். நீர்ப்பரப்பு போக எஞ்சியுள்ள நிலம் 1/4 பங்கே என்பதாலும் அவ்வெஞ்சியுள்ள பரப்பும் வற்றாத ஆறுகள், ஏரிகள், குளங்கள்,  பெரும் வாய்க்கால்கள் போன்றவற்றால் நிரப்பப்படுவதனாலும், ...
image-33

காப்பாற்றுங்கள்……….!

- களப்பாள் குமரன்              எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….? தமிழ் நாட்டில் தமிழ்வாழ, நூறுபேர் சாகும்வரை. உண்ணா நோன்புப் போராட்டம். முதலமைச்சர், தலைமைச் செயலாளரை ...

எது சொந்தம்?

-     இன எழுச்சிக் கவிஞர் கவிஞர் இராமச்சந்திரன் விளைந்தபயிர் வளைந்தபடி குனிந்த வாறே        வீடெல்லாம் துடைப்பத்தால் பெருக்கி நின்றாள்! கலைந்தபடி கிடந்திருந்த குப்பை கூட்டி         காலடியில் அவள்குவித்தாள்! கட்டில் மீது அமர்ந்தபடி பார்த்திருந்தான் விலகும் ஆடை  அலைபரப்பும் வெளிச்சத்தில் தனைம றந்தான்! நிமிர்ந்தபடி அவள்நின்றாள்! “எதனைக் கண்டீர்  நீந்துகின்றீர் இன்பத்தில்” என்றாள் மங்கை “ஆடாத கோபுரத்தின்  கலசந் துள்ளி ஆடுவதை நான்கண்டேன்! எந்த நாளும் வாடாத தாமரையாய் முகத்தைக் கண்டேன்!        ...

சோர்விற்கு விடைகொடு!

- தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும் - பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை ! வெடிக்கச் செய்வதற்கும் வெட்டிப் பிளப்பதற்கும் துணை நிற்கிறது என்றாலும், மலைக் ...

தமி்ழ்க் கோட்டம் அமைய நன்கொடை வேண்டுகிறோம்!

பேரன்புடையீர், வணக்கம்.   தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக அமையவுள்ள ‘தமிழ்க் கோட்டம்’ எழுவதற்குத் தாங்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம். தங்களின் உதவியானது காலந்தோறும் நன்றியோடு நினைவுக் கூரப்படும்.   தமிழ் உள்ளமும் உணர்வும் கொண்ட தாங்கள், இந்தத் தூய்மைத் தமிழ்ப்பணிக்குக் கண்டிப்பாக உதவுவீர்கள் எனப் பெரிதும் நம்புகிறோம். நாம் வாழும் காலத்தில் தமிழுக்குச் செய்யும் ஓர் அரும்பணியாகவும் நிலையான ...
image-25

அன்று இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் – இன்று எம் உள்ளத்தில்

1 திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் 2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம் 3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம் 4 திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் 5 மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் 6 மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் 7 மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் 8 அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் 9 முல்லைத்தீவில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 10 விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் 11 ...

இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்

இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்   -  சு.கிருட்டிணன்  காட்சி - 1  சேரன் : டேய்! சேந்தன் என்ன இது புது மிதிவண்டியா? அருமையாக இருக்கிறதே! எப்பொழுது வாங்கினாய்? சேந்தன்   :நேற்றைக்குத்தான்! எங்க மாமா எனக்குப் பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்திருக்கிறார். சேரன் : டேய்! உண்மையிலே இது மிதிவண்டி மாதிரியே இல்லைடா.  பொறிஉருளி மாதிரியே இருக்கிறது. சேந்தன்   : ஆமாம்டா.. இதில் ...

மருமகள்

மருமகள் -   க.தமிழமல்லன் “இனி ஒரு நொடி கூட நான் இங்கிருக்கமாட்டேன். உங்க அப்பாவுக்குக் கொஞ்சங் கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே! ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும்.  உடனே வழிபண்ணுங்கள்” “இரு, இரு. அமைதியாய் இரு. எங்க அப்பா எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் பேசாதே!“ “எல்லாம் எனக்குத் தெரியும். நீங்கள் என்ன ...
image-18

களம் வெல்வாய்!

அகர முதல இணைய இதழே! பிற மொழிக்கொலை தடுக்க அறிவு தா! ! கொப்பழிக்கும் எரிமலை தரும் வீரம் நீ! காற்று துப்பி விழுங்கும் சூறாவளியின் ஈரம் நீ ! எடு! திருவள்ளுவர் போர்க்கருவி எழுத்தாணி உழு! அகர முதலே! நீ தமிழ் விளையும் காணி ! தொலைந்த மானத்தைத் தோண்டி எடு! தொலை தூர வானத்தில் தமிழை நடு ! இணையத்தில் தமிழ் வளர்க்கும் முதல் ...
image-16

ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம்? – – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

“ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்கவேண்டும்” என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள்.   இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயன்றபோது “உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்” என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.   நமக்கு உடன்பாடே இல்லாத அந்த இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட “வெள்ளைக்கார வீரர்களுக்குச்” சென்னையில் இரண்டு இடங்களில் நினைவிடங்கள் ...

காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக

பூத்திடும் மழலையர் பள்ளிகள் எல்லாம் புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம் புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில் புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர் நயத்தகு மேடையில் நடன ஆட்டம் தீத்திறம் இல்லா நம்மோர் செயலால் திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள் தலைமை தலைமை என்றே நம்மோர் தலைவர் என்றே அனைவரும் உள்ளார் தலைமை காக்கும் தலைமை இல்லை தவநெறி போற்றும் தொண்டர் இல்லை அவனிவன் எனறே குறையாய் மொழிவான் அவனியே ...
1 633 634