image-11300

புருவங்களை முறுக்கு! – மும்பையில் ஆதிரை முழக்கம்

தமிழ்வாழ்த்து எல்லையை இழந்தாய் வாழ்ந்த இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று முல்லையும் இழந்தாய் எங்கள் முத்தமிழ்த் தாயே என்றும் தொல்லையில் கிடந்தும் வீரத் தோள்தனைத் தூக்கி நின்றாய் இல்லையே சங்கக் காலம் ஏங்கினேன் தமிழே வணக்கம். அவை வணக்கம் கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை பொன்னகராம் புதுநகராம் வருவாய் எல்லாம் குவிக்கின்ற ...
image-11363

தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தாராள விற்பனை

படம் நன்றி: தகவல் தளம்   தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தங்குதடையின்றி மிகுதியாக விற்பனை ஆகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி,சுற்றியுள்ள பிற சிற்றூர்களில் சும்பால், எருமைப்பால் என இரண்டு வகைகளாகப் பால் விற்பனை செய்கிறார்கள். பசும்பாலாக இருந்தால் அடர்த்தி குறைவாகவும், எருமைப்பாலாக இருந்தால் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். ...
image-11325

பழமை மாறாத காதோலை கருகமணி வழிபாடு

  தேவதானப்பட்டிப் பகுதியில் காதோலை கருகமணி வழிபாடு பழமை மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்துக்கள் என்றால் காமாட்சியம்மன் கோயில் அல்லது தங்கள் குலதெய்வக்கோயில்களிலும், இசுலாமியர்கள் என்றால் வியாழக்கிழமை வீட்டின் மேற்குப்பகுதியில் பத்தி, பூ, காதோலை கருகமணியை வைத்து தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. ஒரு சில பெண்கள் அருள்மிகு காமாட்சியம்மனுக்கு நேர்ந்து பக்தர்கள் ...
image-11319

இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் . . . . . .

தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்)  தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி ஓடைகளைக்கவர்ந்து ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றிஇறைச்சி ஆகிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கள்ளத்தனமாகக் கவர்ந்து கட்டப்பட்ட கடைகளில் இருந்து வெட்டப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் கழிவுகளை ஓடைகளில் கொட்டி விடுகின்றனர். ...
image-11315

மாணவிகளைக் கடத்தத் திட்டமிடும் குற்றக்கும்பல்

பன்னிரண்டாம் வகுப்பு  மாணவிகளைக் கடத்தத் திட்டமிடும் குற்றக்கும்பல்(மாபியாக்கள்)   தேவதானப்பட்டி பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளைக் கடத்தத் திட்டமிட்டுள்ளது குற்றக்கும்பல்(மாபியா). தேவதானப்பட்டி, செயமங்கலம், கெங்குவார்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம், வத்தலக்குண்டு சென்று படிக்கும் மாணவிகளும் உள்ளனர். இவ்வாறு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை அவர்களின் ...
image-11311

சிலம்பாறு – வே.முத்துவிசயன்

  ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து ...
image-11369

‘மீண்டும் வருவோம்’ – குறும்படம் திரையிடல்

   தாயக-தமிழகக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் தமிழீழ மண்ணில் இக்காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 'மீண்டும் வருவோம்' குறும்படம் சென்னையில் சிறப்பாக வெளியிடப்பட்டுத் திரையிடப் பட்டுள்ளது.  பாசறைப் பட்டறை வழங்கிய 'மீண்டும் வருவோம்' என்ற இக் குறும்படம் மாசி 24, 2046 / 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக மகளிர் ...
image-11366

போலி எண் தகட்டுடன் உலாவரும் ஈருருளிகள்!

போலி எண் தகட்டுடன் உலா வரும் இருசக்கர வாகனங்கள் - மோதலில் காயமடைந்தவர்கள் இழப்பீடு பெற முடியாமல் தவிப்பு   தேவதானப்பட்டிப் பகுதியில் போலி எண் தகட்டுகளுடன் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் உலாவருகின்றன.   தேவதானப்பட்டிப் பகுதியில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடாகா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நிதித் தொழில், கட்டடம் கட்டும் தொழில், தோட்ட ...
image-11358

செயற்கை இலைகளால் வாழையிலை விலை வீழ்ச்சி

    தேவதானப்பட்டி பகுதியில் செயற்கை இலைகளால் வாழையிலைகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.   தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, பரசுராமபுரம், கெங்குவார்பட்டி போன்ற பல பகுதிகளில் வாழை பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் பலவகையான வாழைக்காய்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.   தற்பொழுது செயற்கையாக ஞெகிழியில் பல்வகை வடிவமைப்புகளில் வாழை ...
image-11296

கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்

கலைச்சொல்  114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ...