தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை   மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி   இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. - மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.   திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் ...
image-10258

கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57
image-10282

திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்

    திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.     செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், ...
image-10270

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் ...
image-10267

சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க

பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் - வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்
image-10280

எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சிப் பேரிடர்!

வைகை அணைப்பகுதிச் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு ...
image-10265

அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

மறைமுதல் கிளந்த வாயன்மதி      மகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி      இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை      அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை      உள்நினைந்து ஏத்தல் செய்வாம் – கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து  
image-10263

தமிழருமை அறியாதாரும் உளரோ

யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என் அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாகி நீயறிவித் தாலறியு நிலமுந் தானே? – பரஞ்சோதி முனிவர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: 45
image-10274

நூலகம் இல்லாத திட்டச்சேரிப் பேரூராட்சி

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் நூலகம் இல்லாததால் அப்பகுதியில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிப்பதற்காகத் தொலைவிடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர்.   ஏறத்தாழ 10,000 மக்கள் தொகை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகம் இருந்தது. நூலகக் கட்டடம் பாழடைந்ததால் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் நூலகம் அமைக்கவேண்டும் ...
image-10145

மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்

ஒய்எம்சிஏ பட்டிமன்றம் மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்புரை : செயலர் கெ.பக்தவத்சலம் தலைமையுரை : பேரா.ப.அர.அரங்கசாமி சிறப்புரை பேரா.மறைமலை இலக்குவனார்