(அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி)
02. பொருள் பால்
08. அரண் இயல்
அதிகாரம் 075. அரண்
நாட்டிற்குத் தேவையான இயற்கை,
செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள்.
ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம்
போற்று பவர்க்கும் அரண்.
போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும்
கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு.
மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல்
காடும், உடைய(து) அரண்.
ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள்
காடுகள் கொண்டது அரண்.
உயர்(வு),அகலம், ...