(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி)
பூ, காய், கனி கலைச்சொற்கள்
மணமலி பூவீ மலர்போ து அலராம்
துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம்
நலம்சேர் குலைதாறு வல்வரியாகும்
பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94).
அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது ...