(அதிகாரம் 068. வினை செயல் வகை தொடர்ச்சி)
02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 069. தூது
தூதரது கல்விஅறிவு, தூதுஇயல்
அறிவு, செயல்உறுதி, சொல்முறை.
681. பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு.
நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும்,
பண்பும், தூதர் இலக்கணம்.
அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு)
இன்றி யமையாத மூன்று.
அன்பும், அறிவும், சொல்ஆய்வுத்
திறனும், தூதர்க்கு மிகத்தேவை.
...