ஐ.நா தீர்மானம் திருடன் கையில்
திறவுகோலை ஒப்படைப்பதற்கு
இணையானது: மரு.இராமதாசு
'இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் ...