image-15011

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

 காந்திகிராம ஊரகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்   தமிழில் கலைச்சொற்கள் பெருகி வருகின்றன. எனினும் துறைதோறும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. புதிய கலைச்சொற்களை உருவாக்க நாம் எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. புதிய கலைச்சொற்கள் என்பன பழந்தமிழ்ச் சொல்லின் மீட்டுருவாக்கமாகவோ பழஞ்சொற்களின் ...
image-16222

இந்தி எதிர்த்திட வாரீர் – பாரதிதாசன்

இந்தி எதிர்த்திட வாரீர் இந்தி எதிர்த்திட வாரீர் -- நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி) முந்திய காலத்து மன்னர் நம் முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்தவட மொழிதன்னை -- விட்டு                                                                                 (5) வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.  (இந்தி) செந்தமிழ் தன்னில் இல்லாத -- பல சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ? எந்த நலம்செய்யும் இந்தி -- எமக்கு இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.         (இந்தி)                                                 ...
image-14981

ஆசிரிய வகையினர் – மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்

ஆசிரிய வகையினர்         நாடிய விரிநூல் சொற்றிடு திறனால் நன் நூலா சிரியன்; நகுபாசுர முதல் உரை செய்தலினால் நவில் உரை யாசிரியன்; நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய் நிலையாற் போத காசிரியன்; இவை நிகழ்தொறும் நிகழ்தொறும் ஆடிய ஞானத் திறன் உறலான் ஞானா சிரியன்             -  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை): சேக்கிழார் பிள்ளைத் தமிழ் - சப்பாணிப் பருவம், 9.
image-14978

நானில மக்களை நால்வருண மக்களாகக் காட்டினர்

  'மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே' என்னும் நூற்பா 22இல் உள்ள நால்வர் என்னும் சொல் நான்கு திணைகளில் வாழ்பவரை குறிப்பதாகும். ஆனால் இது நான்கு வருணமக்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் மேலோர் என்பது, முதல் இரு வருணத்தை சேர்ந்த இருபிறப்பாளர்கள் எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த சொல் வல்லமை ...
image-14975

தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்

  திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, ...
image-14973

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர்

பேராசிரியர் எனப் பலர் உள்ளனர் திருக்கோவையார் உரைகண்ட பேராசிரியர் பொதுப்பாயிரம் செய்த ஆத்திரையன் பேராசிரியர் மயேச்சுரர் என்னும் பேராசிரியர் குறுந்தொகை உரையாளர் பேராசிரியர் பேராசிரியர் நேமிநாதர் தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர்
image-14970

சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் – டி.வி.சதாசிவம்(பண்டாரத்தார்

சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் சேனாவரையர் வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். இவ்விரு பெரிய மொழிகளும் இருவேறு தனிமொழிகள் என்பதை மறந்து வடநூல் முடிவுகளையும் கொள்கைகளையும் தமிழுக்குரிய இலக்கணங்களில் புகுத்தி அவற்றிற்கு அமைதி கூறுவர். -ஆராய்ச்சி அறிஞர் டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்: தமிழ் இலக்கிய வரலாறு: பக்கம். 36
image-14968

பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் – மு.வை.அரவிந்தன்

பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் கடல்கோளுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் கறையானுக்கும் கல்லாத மக்களின் பொல்லாத அறியாமைக்கும் இரையாகி, கணக்கற்ற தமிழ்நூல்கள் மறைந்து விட்டன. அந்நூல்களின் சில பகுதிகளையும் பெயர்களையும் உரையாசிரியர்களே நமக்கு வழங்கிப் பேருதவி புரிந்துள்ளனர்... உரையாசிரியர்கள் தம் காலத்து மக்கள் நிலை,வாழ்க்கை முறை, நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு, அரசியல் போக்கு ஆகியவற்றை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றனர். ...
image-14965

உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் –

உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் உரையாசிரியர்கள், தாம் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி நிரப்புவதால் நாம் அறிவுக்களஞ்சியத்தினுள் எளிதில் புகுந்து இன்புமுற முடிகிறது. சில பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் நயமிக்க விளக்கமும் எழுதியிருப்பதால் அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. விளங்காமல் இருந்த - ஐயத்திற்கு இடமாக இருந்த எத்தனையோ ...
image-14962

இளம்பூரணர் உரை தமிழ்ப்பண்பாட்டைப் போற்றிக் கூறுவது

  இளம்பூரணர் உரை தமிழ்ப்பண்பாட்டைப் போற்றிக் கூறுவது. துறவியான இவர், தமிழ் சமய இலக்கியங்களுள் ஒன்றைத் தேர்ந்து உரைசெய்ய முற்படாமல், ஒல்காப் பொருமைத் தொல்காப்பியம் என்ற சிறப்பு நூலைத் தேர்ந்து கொண்டதனால், இவருடைய தமிழார்வமும், சிறந்த பண்பும் நன்கு விளங்குகின்றன. சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதினார். - உரையாசிரியர்கள்
image-14960

அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர் – மு.அருணாசலம்

அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர்   இவ்வுரை அரும்பதவுரை மட்டுமன்று. வினைமுடிபு காட்டுதல், பொருள் தொடர்பு காட்டுதல், அரங்கேற்றுக் காதையிலும் கானல் வரியிலும் இன்று அடியார்க்கு நல்லார் உரை இல்லாத பிற பகுதிகளிலும் பேருரையும் பெருவிளக்கமும் கூறுதல், மேற்கோள் தருதல் முதலிய பகுதிகளைப் பார்க்கும்போது, இவ்வுரை அரும்பதவுரை அன்று, அரிய உரை என்றே கருதத் தோன்றும். சில ...