image-11698

“சொக்கலிங்கம் அக்கதமி” யின் இலவச வகுப்புகள்..!

புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அக்கதமி” யின் இலவச வகுப்புகள்..!   புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேசு) அவர்களது நினைவாக நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் தொடங்கப்பட்ட “சொக்கலிங்கம் அகதமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக ...
image-11695

நல்வழியின் சொல்வழியே… சந்தர் சுப்பிரமணியன்

நம்மை அணுகி நலங்காப்போம் நாமென்றே நிம்மதியாய் நிற்கும் நிழற்சுற்றம் - வெம்மைவரின் கோதுவேர்த் தாகமறக் கொட்டுமழை போன்றதுவே தீதொழிய நன்மை செயல் செயற்கண் நுணங்கித் திறஞ்சேர்த்துப் பின்னர் அயல்நின்றாங்(கு) ஆர்குறைகள் ஆயும் - இயல்பதனைத் தட்டாதார் வெல்வார், தகவிலார்க்(கு) ஏதுசெயம் பட்டாங்கில் உள்ள படி படிக்கும் பொருளுணர்ந்து பட்டறிவோ டுள்ளம் துடிக்குநிலை கொண்டோர் தொழிற்செய்! - விடுத்ததனை அஞ்சுமனம் கொண்டே அறிவில்லா மூடராய்த் துஞ்சுவதோ மாந்தர் தொழில் தொழிற்சிறக்கப் போராடித் தொல்லைபல பெற்றும் உழைப்பினுல ...
image-11692

பேரின்பம் நல்குமாம் தாய்மொழி – கவிக்கோ ஞானச்செல்வன்

  தாய்மொழி என்பது சிந்தனைக்கோ ஊற்றுக்கண் சீர்மைக்கோ நாற்றங்கால் வந்தனைக்கோ சீர்தெய்வம் வாழ்க்கைக்கோ உயிர்நாடி முந்திவரும் நல்லறிவு மூளுகின்ற மெய்யுணர்வு வந்துலவும் பூந்தென்றல் வழிகாட்டும் ஒளிவிளக்கு தாய்மொழி என்பது தாய்முலைப் பாலதாம் ஊட்டம்மிகத் தருவதாம் உரமூட்டும் வரமதாம் வலிமையைச் சேர்ப்பதாம் வல்லமை வளர்ப்பதாம் பிணியெலாம் அகற்றுமாம் பேரின்பம் நல்குமாம் நந்தமிழ் வண்டமிழ் செந்தமிழ் பைந்தமிழ் இன்தமிழ் பொன்தமிழ் சொற்றமிழ் நற்றமிழ் சுகத்தமிழ் அகத்தமிழ் சங்கத்தமிழ் தங்கத்தமிழ் பொங்குதமிழ் தங்குதமிழ் கன்னல்தமிழ் கட்டித்தமிழ்! - கவிக்கோ ஞானச்செல்வன்
image-11655

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு

அன்பான தோழருக்கு வணக்கம்!  சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!  நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி: ...
image-11620

இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!   நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் ...
image-11648

கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin

ஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin - இலக்குவனார் திருவள்ளுவன்
image-11645

கலைச்சொல் தெளிவோம்! 127: ஞமன்-pointer

 பாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.  தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது.   ஞமன்-pointer - இலக்குவனார் திருவள்ளுவன்
image-11642

கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl

நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய ...
image-11640

கலைச்சொல் தெளிவோம்! 125 : இவரி/இவருநர்-jockey

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey - இலக்குவனார் திருவள்ளுவன்