(எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் - தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
அ. தமிழும் – தமிழரும்
தமிழ்நாட்டில் இன்று ஆரியர், ஆந்திரர், கன்னடர், துளுவர், கேரளர், துருக்கியர், ஆங்கிலோ-இந்தியர் முதலிய பலர் வாழ்கின்றனர். ஆயினும், பல்லாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதனால் இவர்கள் தம் தாய்மொழி “தமிழ்” என்றே மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், படிக்கவும், வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் போதும் ...