image-3797

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே – ஓவியா

  விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவைச் சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களைச் சுமக்கிறது   கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383
image-3792

என் தேசக் காற்றே..! – நா.நிரோசு

    செந்தமிழ் பேசும் என்தேசக் காற்றே செங்கடல் தாண்டி வந்து என்தேகம் தூண்டிவிடு...! ஈழமண்ணின் ஈரம் கொண்டு இந்தப் பாலை மண்ணை பனிமலர்த் தோட்டமாய் மாற்றிவிடு...! தாயகம் தாண்டி வந்து தவிதவிக்கும் நேரம் இது தடையின்றித் தாவிவந்து - என் தலையைக் கோதிவிடு...! அம்மாவின் கைச்சோறு அன்பான சாப்பாடு அந்தநாள் நினைவுகளை அள்ளிவந்து ஊட்டிவிடு...! ஆண்டுகள் பல கடந்தாலும் அன்பு நெஞ்சங்கள் மறந்தாலும் என்தமிழே நீமட்டும் என்னோடு வாழ்ந்துவிடு...! http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211564
image-3741

இதயத்தில் எரியும்தழல் என்றைக்கும் அணைவதில்லை!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்ணுற்றோர் எல்லாம் கதறி அழுவாரே.. குப்பைத்தொட்டிகளில் வாரியிறைத்தாற்போல் பிணங்களைக் குவித்துக் காட்டினாரே! ஒரு நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்றுசொல்லி, சொந்தநாட்டு மக்களையே நயன்மையின்றிக் கொன்று குவித்தனரே! மனசாட்சி ஒருசிறிதும் இல்லாத கயவர்கள் இன்றும் மனித உருவில் வாழ்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்களே! பாலுக்கு அழுகின்ற பச்சிளம்குழந்தை முதல் பாவையர் யாவரையும் கொடுமையின் உச்சம் கொண்டு சென்றனரே! இலட்சத்து எழுபதாயிரம் என்கிற ...
image-3786

மாண்டுபோன‌ மாந்த நேயம் – நற்றமிழன்

  எனது தாயைக் கற்பழிக்கின்றான் சிங்களவன் என் கண்முன்னே முரளீதரன் பந்துவீச்சில் இந்தியனொருவன் தனது ஆட்டத்தைப் பறிகொடுத்து வெளியேறுகின்றான் வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக‌ மன்னியும் நண்பனை! சாக்கடையிலிருந்து தாய்ப்பால் பருகியவனவன்! இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள் அம்பானியும், அகில உலகமும் பார்வையாளனாக மட்டும் இங்கே மாண்டுபோன‌ மாந்த நேயமும் ,,,,,, http://natramizhan.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/
image-3734

உடைத்தெறி வேலிகளை! – கார் முகிலன்

நாம் புதைந்த இடத்தில் இன்னும் புழுதி அடங்கவில்லை நீங்கள் தூக்கிச் சென்ற எம்முடல் ஈரம் காயவில்லை இன்னும் கொதிக்கிறது என் குருதி எழுந்து போராட உடலுடைந்து பிணமாய்க் கிடக்கிறேன் கல்லறையில் மனம் உடையாமல் முடிந்தால் எனக்கோர் புது உடல் தாருங்கள்! ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்! என் இனிய ஈழ உறவுகளே என் கல்லறையில் - பூ வைக்கும் பெண்டுகளே உம் மானம் காக்க வருகிறேன் சிங்களவன் வாலை அடக்க எழுகிறேன் தீயில் நீராடிய என் சகோதரன் பக்கத்தில் உறங்குகிறான் பாருங்கள் கரும்புலியாய் வெடித்தவன் அவன் உடல் கண்டிருக்க மாட்டீர்கள் அவன் உள்ளம் அறிவீர்கள் தாயினத்திற்காகத் துணிந்து உயிரை ஆயுதமாகக் கொடுத்த உங்களைப் ...
image-3777

நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே

ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவைப் பார்த்தோம் கண்களை மூடி இது உன் விதி என்றது எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர் யேசுவைக் கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் அடையாளம் காட்ட யூடாசு வந்தான் மாவீரன் கல்லறையில் மீண்டும் இரத்தம் வடிய உயிர்த்திருந்தவர்களை இன்னொருமுறை புதைத்தனர் கனவுகள் உடைந்து கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது இரத்தமும் சதையுமாய் எழுப்பிய சுவருக்குள் எங்கள் முகங்கள் எரிந்து ...
image-3707

முள்ளிவாய்க்கால் உனக்கே சொந்தம் – கவிதை

  தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா? அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள்!!! முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரங்களில் ஐயோ.. அம்மா.. ஆ... என்ர பிள்ளை.. என்ர அம்மா.. என்ர அப்பா.. என்ர அண்ணா.......ஐயோ.......... நான் என்ன செய்வேன்................................ என்ற அவலக்குரல்கள்தான் அதிகரித்தன அந்த நாட்களில் அப்போது கந்தகக் குண்டுகள் அப்பாவித் தமிழர் உடல்களை துளைத்துத் துவம்சம் செய்து சிதைத்து மமதை ...
image-3702

காவியச் சதுக்கம் – கவிஞர் தமிழவன்

  கல்லறை தின்றதோ எங்கள் மறவரை களங்கள் தேடுதே அந்த வீரரை நிலத்தில் இடியான எங்கள் சோதரை கண்ணிவெடிகள் மறக்குமா புதைத்த மாதரை விடிவு ஒன்று தான் எம் மண்ணின் மூச்சு விடியும் வரையும் இல்லை வாய்ப்பேச்சு தமிழர் என்பதே தலைவிதி ஆச்சு என்று சங்கை ஊதியே களம் சேர்ந்தாச்சு முப்படை என்பதே உலகின் வழக்கம் நாற்படை கண்டது புலிகள் இயக்கம் பகையின் தலையில் இடிகள் முழக்கம் அது கரும்புலி என்றொரு காவியச் சதுக்கம் ........ நன்றி :  http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196388&pidp=212278  
image-3698

விதைத்துப்போயிருக்கிறர்கள்

  தமிழ்த்தாயே மரம் தாங்கும் மண்ணாய் இலை தாங்கும் மரமாய்   காய் தாங்கும் கொடியாய் சேய் தாங்கும் தாயாய்   நீயே தாய் நாங்கள் சேய்   ஈழத்தின் முடிவிலா கொலைகள் கண்டு முடியாமலே போகிறது உன் இரங்கற்பா.. !   ஈழத்திற்காக இறந்தவர்கள் எல்லாரும் சிதை சிதைந்து போகவில்லை விதை விதைத்துப் போயிருக்கிறார்கள்...!         - விக்கி நன்றி:  ஈழம்கவிதைகள் வலைத்தளம் http://eelamkavithaigal.blogspot.in/
image-3691

வடக்குத்திசை – நமக்கு எமன் திசை

1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா?   2. கவசஊர்திகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்... இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம்   3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’   4. முகம் சிவந்தார் இட்லர் மகிந்த இராசபட்சேவைப் பார்த்து “ஆசுட்விட்சு புக்கன் வால்டு என ஆங்காங்கே கொலைக்களம் வைத்திருந்தேன் யூதர்களுக்கு... நீங்கள் என்னை வென்று விட்டீர்கள் மூன்றில் ஒரு பங்கு நாட்டையே அல்லவா படு கொலைக் கூடமாக்கிவிட்டீர்கள் விட்டுத் தருகிறேன் 'பிரபஞ்சக் ...
image-3685

மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்

பண்டைத்தமிழ் மக்கள் மறு பதிப்பெனவே மலர்ந்தோரே! என்றும்தமிழ் மறம் ஓங்கும் என்றே களம் கண்டோரே! விழுந்த தமிழ் இனம் எழவே வீரத்தீ விதைத்தோரே! இழிந்தஈனச் சிங்களரின் எதிர்ப்பையெலாம் மிதித்தோரே! தனிநாடாம் தமிழ்ஈழம் தனைநிறுவி வாழ்ந்தோரே! புத்தமும் காந்தியமும் கைகோத்ததால் வீழ்ந்தோரே! புலித்தலைவர் ஆட்சிகண்ட பொறாமைநரி இராசபக்சே கொலைபுரிந்தான் தமிழ்இனத்தைக் கொடிய நச்சுப்பாம்பெனவே! இந்தியாஆள் காங்கிரசார் ஈன்றகருவி உதவிகொண்டே தந்திரமாய் இராசபக்சே தமிழ்இனத்தைக் கொன்றானே! இரண்டாயிரத் தொன்பதாண்டு மே-பதினெட் டாம்நாளே இருண்டதுவே தமிழ்ஈழம் இருநூறாயிரவர் இறப்பாலே! பதினெட்டு மேத்திங்கள் கதியற்றார் நினைவுநாளன்று சதிசெய்த காடையரின் விதிமுடிக்கும் கறுப்புநாள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்போர் மூட்டும்தமிழ் மானத்தீ! வெல்லவேண்டும் தமிழ்ஈழம்! விளையவேண்டும் தமிழ்ஆட்சி! - அரசு விருதாளர் ...
image-3681

நெஞ்சை மெல்லும் மே பதினேழு – தமிழேந்தி

நெஞ்சை மெல்லும் மே பதினேழு   வையகம் காணா வன்கொடுந் துயர்களை வரலாறு மறந்திடு மாமோ? வன்னியில் அந்நாள் சிதைந்த உயிர்களின் வலிகளைச் சொல்லிடப் போமோ? ஒருநூறு ஆண்டுகள் அல்ல, நம்மினம் உள்ளவரை நெஞ்சைப் பிளக்கும் ஒன்றுக்கும் உதவாக் கரைகளாம் நம்மை உறுதியாய் வருங்காலம் பழிக்கும் படைகளைக் கொடுத்தான் பழிகாரன் தில்லியன் பைந்தமிழ் மானம் கெடுத்தான் பல்லாண்டு பல்லாண்டாய் நெஞ்சிலே சுமந்த பழியெலாம் மொத்தமாய் முடித்தான் தடைகளைத் தகர்த்த தமிழ்ப் புலிகளின் தடுப்புகள் யாவுமே உடைத்தான் சதிகாரன் மகிந்தா ...