image-402

மீனியல் (Icthyology)

– முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்: குறுக்கம்-Depression;  நெருக்கம்-Compression;  தோள்துடுப்பு-Pelvic Fin;  கால்துடுப்பு- Pectoral Fin;  புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin;  வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels;  வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs;  புதையிர்த்தடம்-Fossil  சென்ற இதழில் மீனியலை அறிமுகப்படுத்தினோம். அருந்தமிழ்ப் புலவர்களின் ...
image-398

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் - மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி - யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் - கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே - மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். ...
image-424

நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்

சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை - எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் 'நீந்திக் கடந்த நெருப்பாறு' எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை ...
image-396

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 3

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: ...
image-394

மாவீரர் உரைகளின் மணிகள் சில!

(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற  ...
image-422

மொரிசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண்

  மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது.  ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளாலும் போரிலும் தங்கள் இன்னுயிர் ...

இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு

  இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான,  படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு  ஆய்வு செய்யுமாறு  முதல்வர் செயலலிதா  தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும்  கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப  நான்கு ஆண்டுகள்  பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும்  மத்திய அரசு  இடம் அளிக்க உள்ளது.  இந்தியக் கடற்படைத் தளபதி  சோசி,  ...
image-392

எல்லாளன் வாழ்க! –

- திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329   எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக! 'இல்லையினி எல்லாளன்' என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே! வெல்வதற்கே வந்த வேங்கை வீரரவர் வெல்வார்! வினைமுடிக்கும் பேராற்றல் வள்ளுவத்தாற் பெற்றார்! ஒல்லும்வாய் அவரறிவார் ஓர்நாளில் ஈழம் உருவாக்கி ஒண்டமிழால் அரசாண்டு வாழ்வார்!   துன்புற்றுத் துடிதுடித்துத் தொல்லையுறும் தமிழர் துயர்துடைக்க விலங்கொடிக்கத் துடித்தெழுந்து புலிகள் வன்படையைக் கட்டமைத்தே வாகைசூடி ...
image-420

தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள்

தமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா!!! தமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio)  ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார். தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள் வருமாறு:-   2008, நவம்பர் 23 ஆம்  நாள் குறும்பட / ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத்  தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான ...
image-416

இணைய இதழ்!

இளையவன்  செயா (கந்தையா)  பூத்துக்  குலுங்கும்   பூஞ்சோலை ;  பறிக்கக்      காத்திருக்கும்   ரோசாமலர்   கவின்தென்ற   லிலாடும் பார்த்திருக்கும்   பாவையவள்   பக்குவமாய்ப்  பூக்கொய்ய      சேர்த்திருந்தாள்    மகிழ்வைத்தன்    செம்முகத்தில் ! பறிப்பவர்   இலக்கணம்   பாவைக்குத்   தெரியும்       ஓரிதழ்     உதிர்ந்தாலும்   ஓர்குறையே ;  அவளுக்கு இதழ்உதிராப்   பூவேபூவைக்கு   இதயம்நிறை   மகிழ்ச்சி        இதழ்    நடத்துவதும்   இதற்கொப்பானதே ! இணையஇதழ்   கண்டேன்   இணையில்லாத்  தமிழ்காக்கும்        கணையாக   விளங்கிய   கால்வழி   நடத்தும் இணையஇதழ்   என்றும்  ...
image-412

மாவீரர் வாழும் பூமி! மறுபடியும் துளிர்க்கும்!!

- புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில் வீணில் படுவீர் அலங்கோலம் பூண்டே அற்றுப் போவீரே-இந்த புலவனின் சாபம் ஆவீரே கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம் கெட்ட உன்னை விடுவதில்லை பட்டவர் நாங்கள் உன்னாலே-அப் பழியும் பாவமும் பின்னாலே விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும் வேதனை எதையும் பண்ணாதே நீ தொட்டது எதுவும துலங்காதாம்-இனி தோல்வியே உனகுலம் விளங்காதாம் அல்லல் பட்டு ஆற்றாது-அவர் அழுத கண்ணீர் ...
image-507

ஏனில்லை பெரியார் படம்!- தமிழேந்தி

வரலாற்றைத் திருத்தும் வேலை வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை பெரியாரைத் தலைகீ ழாகப் பிழைபடக்காட்டும் வேலை சரியாய்அவ் வேலை தன்னைத் தமிழ்த்தேசம் பேசு வோர்கள் விரிவாகச் செய்கின் றார்கள் விதைநெல்லை அவிக்கின் றார்கள் புராணங்கள் பொய்கள் தம்மைப் பூணூலார் சதிகள் தம்மை இராப்பகல் எடுத்துச் சொல்லி இனமானம் காத்து நின்றார் திராவிடர் தமிழர் என்றார் திருக்குறள் மேன்மை சொன்னார் பொறாமையால் இவரை மாற்றான் போலன்றோ பழிக்கின் றார்கள்! ஒருபக்கம் சாதிக் கேடோ உழைப்பாளர் தமைப்பி ளக்கும் மறுபக்கம் மதத்தின் ஆட்டம் மாத்தமிழ் நாட்டு மாண்பின் திறத்தையே ...