ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 6 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 16 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமானோ, அவர்மேல் சென்று தன் அருமந்த நாட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவனாய் வாளாவிருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு, ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைத் தீப்பொங்கி எரியும் வண்ணம் வீர மொழிகள் பல புகன்றார் : “வெண்காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும் மலைச்சாரலில் வாழும் மறப்புலி சீறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ? காய்கதிர்ச் செல்வன்…
ஒளவையார்:6 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 15 2. ஒளவையார் (தொடர்ச்சி) இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று….
ஒளவையார்:4 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 13 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன்,…
ஒளவையார்:3 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 2: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 12 2. ஒளவையார் (தொடர்ச்சி) வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் வீரத்திலும் நிகரற்ற பெருவிறல் வேந்தனாகக் காட்சியளித்தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானாயின், அத்தேர்க் கால் எத்துணை வலிவுடையதாகும்? அத்துணை உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விளங்கினான் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக்கில்லை; தன்மை தெரியாது,‘இளையன்…
ஔவையார் 3 – இரா.இராகவையங்கார்
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 12 3. ஔவையார் (தொடர்ச்சி) ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும். ஔவையார் பெண்ணையாற்றங்…
ஒளவையார்:2 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 11 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய்…
ஔவையார் : 2 : – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– 11 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 10. தொடர்ச்சி) 3. ஔவையார் தொடர்ச்சி) அதிகமான் தகடூரில் வதிந்தனர். வள்ளுவர், மயிலையிலும் கூடலிலும் வதிந்தனர். ஔவையார் பெண்ணையாற்றங்கரைக்கணுள்ள புல்வேளூரிலும் அதியமானூரிலும் திருக்கோவலூரிலும் வதிந்தனர். மேற்காட்டிய ‘கபில ரதிகமான்’ என்னும் வெண்பாவானே உப்பை யிருந்தது ஊற்றுக்காடென்பதும் உணரப்படும். இவ்வாறு குடியானும் இடத்தானும் வேற்றுமை பெரிதுடைய இவர்கள் ஓருடற் பிறப்பினரென்பது என்னையெனின், இவர்களைப் பெற்ற தந்தையுந் தாயுந் தேச சஞ்சாரிகளாய் ஓரோரிடத்து ஒவ்வோர் காலத்து இவரைப் பெற்றுவிட்டனராக, இவர்களை எடுத்துவளர்த்தார் வேறு வேறிடத்து வேறு…
ஒளவையார்:1: ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள் – 10 2. ஒளவையார் ‘-ஒண்டமிழே!பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1] எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது! ———–[1]. தமிழ்விடுதூது———- உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய…