வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஆ. அரண்  சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி ஆராய்வோம்.  நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன. திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு…

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…