ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ”! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார்,…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும் பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர். அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம். காலமெல்லாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான் அவனும் இவனும் எவனும் ஒன்றாய் ஆகும் கொள்கை யுடையவன் யான் விருப்பு வெறுப்பை வென்று வாழும் வேதாந்தி போல்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார். பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில் பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்! கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்! மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்! தன்னலம் இன்றி இந்நாடு உயர என்ன செய்தீர்? எல்லாம் சுயநல வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்! ஆட்டுக்(கு) ஓநாய்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) – வல்லிக்கண் ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) 3.ஒருமைப்பாட்டு உணர்வு “சுடர்முகம் காக்க வேண்டும் சோர்வின்றி உழைக்க வேண்டும் அடலேற்று வலிமை வேண்டும் அஞ்சிடா வாழ்வு வேண்டும் கடலைப்போல் உள்ளம் வேண்டும் கறைபடாக் கரங்கள் வேண்டும் நடமாடும் தொழிற்கூடம் வேண்டும் நல்லுழைப்பாளர் வேண்டும் நாடு முன்னேறுவதற்கு இந்திய நாடு முழுவதும். ஒன்றே என்ற ஒருமைப்பாட்டு உணர்வு நாட்டு மக்களிடையே வேரூன்றி வளர வேண்டும். ஏற்றமும் தாழ்வும் ஒன்றே, எந்தையர் நாடிங்கேதான் எல்லாரின் வாழ்வும் ஒன்றே…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார். ஆண்மைசால் பேருழைப்பை அன்னை நம் நாட்டுக்காக்கி, வீண்பேச்சைக் குறைத்துத் தீய வீணரை ஒழித்தே அன்பாம் காண்தகு நிலைகள் எல்லாம் கடும் உழைப் பொன்றால் என்ற மாண்பெழில் கொள்கை வெல்லும் வரலாறு படைக்க வேண்டும்! முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய…