பாராளுமன்றில் அறிஞர் அண்ணா – இந்து ஆங்கில நாளிதழ்

  பாராளுமன்றில் அறிஞர் அண்ணா   திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார்.   அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற…

தாழ்ந்த தமிழனே! – அறிஞர் அண்ணா

  தமிழர், தனி இனத்தவர், பன்னெடுங்காலம் பண்புடன் வாழ்ந்து, பாரோர் புகழ வாழ்ந்து, கலைச் செல்வங்களைக் கண்டவர். இந்தியா எனும் உப கண்டத்திலே பல இனங்கள், தத்தம் கலைகளுடன் உள்ளன. தமிழ் இனத்துக்குத் தனிக்கலை ஒன்று உண்டு. வெவ்வேறாகவும், தனித்தனியாகவும் தனிப்பண்புகளுடன் விளங்கி வந்த ஆரிய திராவிடக் கலைகள் கலக்க நேரிட்டது ஒரு பெரும் கேடாக முடிந்தது. அத்தகைய கலப்பு நூற்களே கம்ப இராமாயணமும் பெரிய புராணமும். தமிழனுக்குத் தனிக்கலை உண்டென்றேன். சங்க நூல்கள் அக்கலைச் செல்வத்தைக் காட்டுகின்றன. தனியான கலையுடன் தனியான வாழ்வும்…

அண்ணாப்பத்து – காரை இறையடியான்

1) பண்ணார் தமிழ்ப் பேச்சுப் பாங்கால் பெரியோர்க்கும் ‘அண்ணா’ வா ஆனான் அவன்! 2) மாற்றார் மதிக்கும் மதிவளம் தாங்கிய ஆற்றலால் ‘அண்ணா’ அவன் 3) இடுக்கண் புரிவோரும் இன்பமெனக் கேட்பர் அடுக்கு மொழி அண்ணா அவன்! 4) நஞ்சிந்திப் பேயை நசுக்கச் சிறையிருக்க அஞ்சாத அண்ணா அவன்! 5) தமிழர் தம் பண்பாட்டைத் தாக்கும் வெறியை அமிழ்த்திடும் அண்ணா அவன்! 6) பேராயக் கட்சிப் பெருங்குற்றம் போக்கிட ஆராயும் அண்ணா அவன்! 7) சீர் திருத்த கருத்தைச் செந்தமிழ் நல்லேட்டில் ஆர்த்தெழுதும் அண்ணா…

பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்

அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா. ‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே! நம் அன்னைத் தமிழ், தொன்மையும், வன்மையும் தூய்மையும் இனிமையும் பொருந்தியதுதான். ஆயினும் தமிழ் மக்களே தமிழின்…

தலைத்தலைமை – அரும்பு

நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத் தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை; கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை. முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்; எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர் கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம். ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை, பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று. ‘நாடெ’ன்பான், ‘நமதெ’ன்பான்; நறுந்தமிழ்க் கிடும்பையெனில் ‘வாடெ’ன்பான், ‘தூக்கிடுபோர் வா‘ ளென்பான்; மொழிகாத்தல்…

அண்ணாவன்றோ? – அறந்தைத் திருமாறன்

வெடிக்கின்ற எரிமலையைப் பாய்ந்து சீறி விரிக்கின்ற நெடுநதியை நாளும் ஓயா(து) அடிக்கின்ற கடலையை மேகத் துள்ளே அலறுகின்ற இடியொலிகள் அனைத்தும் பேச்சில் வடிக்கின்ற ஆற்றலர்யார்? கருத்தை யள்ளி வழங்குகொடை வள்ளல் யார்? கொடுமை கண்டு துடிக்கின்ற உளத்தர்யார்? புரட்சியாளர் தொடருக்கே ஒளி விளக்காம் அண்ணா வன்றோ! குற்றால அருவியதின் குளிரும்; நல்ல குலைக்கனியின் சார்தந்த சுவையும்; நஞ்சை வற்றாத தஞ்சையதின் வளமும்; சேர வளநாட்டின் இயற்கையதின் செழிப்பும்; என்றும் முற்றாத செந்தமிழின் இளமையெல்லாம் முழுவடிவாய்ப் பேச்சாலும் செயலால் அன்பால் உற்றாரப் பெருக்கெடுக்கத் தேக்கும் தோன்றல்!…

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு : தமிழண்ணல்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தனிச் சிறப்பும் மறுமலர்ச்சிப் போக்கும் உடையதாகும். அது புரட்சியில் கிளைத்துப் புதுமை பூத்துப் பொலிகின்றது. இவ்வளர்ச்சியில் பங்கு பெறும் சான்றோர் பலருள் அறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலையாய இடம் பெறுகிறார்கள். கொள்கை வேறுபாட்டுக்காகத் தம் கண்களைக் மறைத்துக் கொண்டு உண்மையை மறுத்தல் முறையன்று. ‘‘காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்’’ நம் கடமையாகும். மொழி வளர்ச்சிக்கு இம்முழு நோக்கமே தேவை. இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச்…

இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

    தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா…

நயம் மிக்கச் சங்கக்கவியும் கற்பனை வறண்ட இடைக்காலக் கவியும் – பேரறிஞர் அண்ணா

  கையில் ஊமையர்   ஒரு   மாதத்திற்கு  முன்  சங்க  இலக்கியங்களில்  ஒன்றான குறுந்தொகையில், ஓர்  உவமையைப்  படித்தேன்.  இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வேறுபாட்டைப் பாருங்கள்!   இந்தக் காலத்துப் புலவர்கள்  எந்தக்  கருத்தை  ஓர்  அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறி   விட்டார்.  அந்த   அடிதான்  ‘கையில்  ஊமன்’ என்பதாகும்.   ஒரு  தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்!  கட்டுங்கடங்காத  காளை; …

இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா

சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு. இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும். சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு  வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு. 1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய…