தமிழ்நாடும் மொழியும் 44 : சீர்திருத்தம்
(தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – தொடர்ச்சி) சீர்திருத்தம் தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும்…
தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 42 : தமிழ் மொழியும் வடமொழியும் தொடர்ச்சி) 6. தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் தமிழ் நெடுங்கணக்கு என்ற சொற்றொடர் தமிழிலுள்ள உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துகளைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துகளிலே சிலவற்றிற்கு உயிர் என்றும், இன்னும் சிலவற்றிற்கு மெய் என்றும், வேறு சிலவற்றிற்கு உயிர்மெய் என்றும், ஆய்தம் என்றும் பெயரிட்டனர், நந்தம் செந்தமிழ்ப் புலவர்கள். உயிர், மெய், முதலிய பெயர்களே அவற்றினாற் குறிக்கப்படும் எழுத்துகளின் இயல்பைத் தெள்ளத் தெளியக் குறிக்கும் தகையவாம். உயிர் என்ற பெயரால் குறிக்கப்படுகின்ற எழுத்துகள்,…
தமிழ்நாடும் மொழியும் 42 : தமிழ் மொழியும் வடமொழியும் – அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 41 : பிற நூல்கள் தொடர்ச்சி) 5. தமிழ் மொழியும் வடமொழியும் அஃது ஒரு காலம்; எது? தமிழும் வடமொழியும் ஒன்று; அது மட்டுமல்ல; தமிழே வட மொழித்தாயிடமிருந்து தோன்றிய ஒரு மொழி என்று எண்ணிவந்த காலமது. மேலும் அக்காலத்திலே வாழ்ந்த தமிழறிஞர்களும் வட மொழி வாணரும் வட மொழியின் துணையின்றித் தமிழ் வாழவே முடியாது என்று உறுதியாக நம்பிவந்தனர். இந்தக் கொள்கைக்கு முதன்முதல் சாவுமணியடித்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர் கால்டுவெல் என்பவராவர். இவர் வெறுமனே தம் எதிர்ப்புக் கொள்கையைக்…
தமிழ்நாடும் மொழியும் 41 : பிற நூல்கள்
(தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி தொடர்ச்சி) பிறநூல்கள் இலக்கணக் கொத்தும் இலக்கண விளக்கச் சூறாவளியும் இலக்கணக் கொத்து என்னும் நூல் கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈசான தேசிகர் எனப்படும் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. 151 சூத்திரங்களாலான இந்நூல் வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது. தொல்காப்பியத்தில் அருகிக் கிடந்த இலக்கண விதிகளையும், சில வடமொழி இலக்கணங்களையும், பல அரிய இலக்கணக் குறிப்புகளையும் நுட்பங்களையும் இந்நூல் கூறுகிறது. இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக…
தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி
(தமிழ்நாடும் மொழியும் 39 : நாடகத்தமிழ்– தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 4. தமிழ் இலக்கண வளர்ச்சி தமிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம். இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி…
தமிழ்நாடும் மொழியும் 39: நாடகத் தமிழ்
(தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – தொடர்ச்சி) நாடகத் தமிழ் தொடர்ச்சி பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால்…
தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது; இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கருனாடக இசை பிறந்தது. ஆரிய மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக்குச் சிறிது ஏற்பட்ட இசையே…
தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 36: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 3. முத்தமிழ் “சங்கத் தமிழ் மூன்றுந் தா” “முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்” என்பன ஆன்றோர் வாக்கு. தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளுள் ஒன்று இம் முத்தமிழ்ப் பாகுபாடாகும். இதனால் வேறு மொழிகளிலே இந்த மூவகைக் கூறுகள் இல்லை என்பதன்று பொருள். ஆனால் முதன் முதலில் தம் மொழியிலே இப்பிரிவு ஒன்று உள்ளது என்று உணர்ந்தவர் தமிழ் மக்களே. அந்த உணர்ச்சியிலேதான் தமிழ் மக்களின் சிறப்பும் சீரும் பொதிந்து கிடக்கின்றன. இனி இக்கூறுகளைப் பற்றிப் பார்ப்போம். முத்தமிழ்…
தமிழ்நாடும் மொழியும் 36: செந்தமிழும் கொடுந்தமிழும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 35: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 2. செந்தமிழும் கொடுந்தமிழும் செந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம். இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனால் முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகிறது. “செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில்”…
தமிழ்நாடும் மொழியும் 35: 2.1.தமிழின் தொன்மையும் சிறப்பும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 34: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தொடர்ச்சி அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார். ‘தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை‘. தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார். 1.தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக்…
தமிழ்நாடும் மொழியும் 34: 2. தமிழ் மொழி – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – தொடர்ச்சி) 2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தோற்றுவாய் பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர். “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளிஅதற்கு இணையாகத் தமிழ்…
தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும்மொழியும் 32: பிறநாட்டார்ஆட்சிக்காலம் – தொடர்ச்சி) 9. மக்களாட்சிக் காலம் ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து…