இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4   தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார்.   நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 03 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) இயல் – 2 இலக்குவனார் வரலாறும் கவிதை தோன்றிய சூழலும்   வரலாறு, மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. வரலாறு நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுவதாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்று வரலாறாக மலர்கின்றன. உலக வரலாறு, அரசியல், வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் வரலாறு, மொழி வரலாறு, கவிதை வரலாறு என வரலாறு பல வகைப்படும். தனிமனித வரலாறு உலக வரலாற்றுக்கு உறுதுணையாக…

தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு

(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு  படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர்   ஆவணி 5, 2046 / ஆக.22, 2015  அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும்  தலைமுடி வழித்துச்   சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று  பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே  இப்பொழுது  அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…