tholkappiyar_ravi02

(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.)

String could not be parsed as XML

முதல் நான்கு  படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர்   ஆவணி 5, 2046 / ஆக.22, 2015  அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும்  தலைமுடி வழித்துச்   சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று  பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே  இப்பொழுது  அமைந்துள்ளது.

முடிவுறும் நிலையில் தொல்காப்பியர் சிலைக்கான  சாந்துக்காரை உரு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காப்பிக்காடு என்னும் ஊரில் நிறுவ இருக்கும்   தொல்காப்பியர் சிலை சென்னையில் உருவாவதின் இற்றை நிலை குறித்துப் படிமப் பார்வைக் குழுவினரால்   ஆவணி 13, 2046 / ஆக. 29 அன்று பார்வையிடப்பட்டது.

முனைவர் மா.நன்னன், முனைவர் பொற்கோ, புலவர் த.சுந்தரராசன், பெங்களூர் மீனாட்சிசுந்தரம், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், இரா.செம்மல், நாஞ்சில் நடராசன், அனகை ஐ.சிவன், ஐ. ஆறுமுகம், கோ.அழகியநம்பி, வழக்குரைஞர் சிரீதரன், ஆகியோர் பார்வையிட்டனர். தலைமைச் சிற்பி கோ.இரவி, துணைச்சிற்பி ஏ.இரவி ஆகியோர் உடனிருந்தனர்.

பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் பொற்கோ ஆகியோர் பொதுவாகச் சில சிறு குறைகள் தெரிந்தாலும் எட்டப்பார்வையில் தெரியாது எனவும் கம்பீரமாக இருக்கிறது என்றும் கூறினர். எனினும் (1) காதணிகள் தேயைில்லை எனக்கூறி அவற்றை அகற்றுமாறு தெரிவித்தனர். அப்படியானால் (2) காதுத்தொளைகளையும் (3) கழுத்தணியாக உள்ளதையும் அகற்ற வேண்டும் எனத் தெரிவித்ததும் அவற்றையும் அகற்றுமாறு கூறினர். அனைவராலும் இக்கருத்துகள் ஏற்கப்பெற்றன.

(4) கால்துணி மடிப்பு வேட்டி போல் இருக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.

பேரா.மா.நன்னன், தொல்காப்பியர் காலத்தில் வேட்டி அணியும் முறை, பஞ்சக்கச்சம் நடைமுறையில் வந்த காலம் ஆகியவனவற்றை அறிந்து அதற்கேற்றாற்போல் அமைப்பதும் சிறப்பாக இருக்கும் என்றார்.

பேரா.பொற்கோ அவர்கள் (5) கழுத்தில் குரல்வளை தெரிவதுபோல் முட்டு இருக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு அவ்வாறு இருக்காது என்றும் ஆண்களுக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இடுப்பு மடிப்பில் வேட்டி கரை உள்ளதுபோல் தோன்றுவதற்கேற்ப   (6) உரிய பிற இடங்களிலும் வேட்டியின் கரை தெரிவதுபோல் அமைக்கவும் தெரிவிக்கப்பட்டது.

பாதங்களின் கால்விரல்கள் அனைத்தும் ஒரே முறையில் உள்ளன.   (7) சுண்டு விரலும் அடுத்த விரலும் உட்பக்கம் மறைந்தாற்போலும், (8) பாதங்கள் சற்று இறங்கி முட்டி அருகே இருப்பதுபோன்றும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிற்பி உரிய திருத்தங்களை மேற்கொண்டு இலக்குவனார் திருவள்ளுவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவர் சிலை வார்ப்பிற்கு ஒப்புதல் தரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் இரு திங்கள் அளவில் சிற்பத்தைத் தருவதாகச் சிற்பி கோ.இரவி தெரிவித்தார்.

கடந்த முறை தில்லித் தமிழ்ச்சங்த்தின் பங்களிப்பாக நூறாயிரம் உருபாய் அளிதததுபோல் இம்முறை பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் பங்களிப்பான நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை   வழங்கப்பட்டது.